லியோ படத்தில் நடிக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி கூறியுள்ளார்.

0
15

மிஷ்கின்: லியோ படத்தின் முதல் ஷெட்யூலில் நடித்துள்ள மிஷ்கினுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நன்றி கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன்,மிஷ்கின், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘லியோ’. இதன் முதல் ஷெட்யூல் காஷ்மீரில் நடந்தது. இதில் படக்குழுவினர் பங்கேற்றனர். இதில் இயக்குனர் மிஷ்கின் நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பை முடித்துக்கொண்டு மிஷ்கின் சமீபத்தில் சென்னைக்கு திரும்பினார்.

lokesh kanagaraj thanks to director mysskin for acting in leo movie

இந்நிலையில் இது பற்றி தனது சமூக வலைதள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கூறும்போது, ‘உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் நன்றி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் செய்தவனாகவும் உணர்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இருந்தாலும் மில்லியன் நன்றிகள் சார். நீங்கள் செட்டில் இருந்த தருணம் அற்புதமானதாக இருந்தது’ என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here