லவ் டுடே திரைப்படம் தமிழில் இப்படி ஓரு வசூல் சாதனை செய்யும் என யாரும் ஏன் படக்குழுவினர் கூட எதிர்பார்க்கவில்லை ஆனால், 100 கோடி வசூல் சாதனையை நெருங்கி வருகிறது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019ம் ஆண்டு கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கராஜனை வெகுவாக பாராட்டினர். 90 கிட்ஸின் வாழ்க்கையை அடிப்படையாக எடுத்த திரைப்படமாக இருந்தது. இந்த வெற்றிக்கு பிறகு இரண்டாண்டு இடைவெளிக்கு பிறகு 2K கிட்ஸின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்ற நோக்கில் மிக எதார்த்தமாக எடுக்கப்பட்ட படம் தான் லவ் டுடே.
இந்த படத்தை இயக்கிய பிரதீப் ரங்கராஜன் நடிகராகவும் இப்படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நம்பர் 4ம் தேதி உலகமெங்கும் வெளியானது.
முதலில் குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே வெளியான இப்படம் நாளடைவில் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கலானது. குறைந்த பட்ஜெடில் உருவான படம் ஆனால், இன்று வசூல் ரீதியாக கோடியை நெருங்கி கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இப்படத்தை இன்று தெலுங்கு ரசிகர்களுடன் ஆந்திரா சென்று பிரதீப் ரங்கராஜன் படம் பார்த்து உள்ளார் படம் பார்த்து விட்டு திரும்பும் போது ரசிகர் ஓருவர் அவரை அலேக்காக தூக்கி வாழ்த்து தெரிவித்து பிரமிக்க வைத்துள்ளார். தமிழகமெங்கும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தெலுங்கு இளைஞர்களையும் ரசிகர்களையும் இப்படம் ஈர்த்துள்ளது.
இதையும் படியுங்கள்: பத்து தல படத்திற்கு பிறகு பிரபல இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு
இது போன்ற பிற தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.