கணேஷ் கே.பாபு: பிக்பாஸ் கவின், மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து கடந்த பிப்ரவரி 10ம் தேதி வெளியான படம் ‘டாடா’. இப்படத்தில் கவின் ஒரு குழந்தைக்கு தந்தையாகவும், கல்லூரியில் படிக்கும் மாணவராகவும் நடித்திருக்கிறார். இப்படம் குறித்து கவின் கூறுகையில்,
இப்படத்தில் நான் ஒரு தந்தையாக நடித்திருப்பது புது அனுபவமாக இருந்தது. இதில் காமெடி, காதல், சென்டிமென்ட் என அனைத்து காட்சிகளும் கண்ணியமாக வந்திருக்கிறது. இப்படத்தில் எனது பாடி லாக்வேஜ் மற்றும் மானரிசங்களை மாற்றி நடித்திருக்கிறேன். இதில் கே.பாக்யராஜ் எனது தந்தையாகவும், ஐஸ்வர்யா தாயாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் கே.பாக்யராஜ் அவர்களிடமிருந்து சில நடிப்பு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன் என்று அவர் கூறியிருந்தார்.
இப்படத்தை இயக்கியவர் கணேஷ். கே.பாபு. இப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இப்படம் வெளியான முதல் நாளிலேயே அவருக்கு புதுப்படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை லைகா புரொடக்ஷ்ன்ஸ் வெளியிட்டுள்ளது. படம் வெளியான முதல் நாளிலேயே இயக்குனருக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து கணேஷ் கே.பாபுவுக்கு கவின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஹீரோ மற்றும் டெக்னீஷியன்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுகிறது.