முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பொது வாழ்க்கையில் கண்ணியத்தை கடைப்பிடித்து, நிலையான ஆட்சியை வழங்கியவர். வறுமையை ஓழித்து, தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்குபவர் மன்மோகன் சிங். அவர் நல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்திய பாரத நாட்டின் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இன்று 90வது பிறந்த நாள். இந்த நாளில் அவரை பற்றிய சிறிய தகவல்களை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். மன்மோகன் சிங் ஓரு அரசியல் வாதி என்பதை விட பொருளாதார நிபுணர் என்பதே சிறப்பு.
அவரை அரசிலுக்கு அழைத்து வந்தவர் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் தான். நரசிம்மராவ் ஏறக்குறைய அரசியளிலிருந்து வெளியேற நினைத்த போது அவரை திரும்பவும் அரசியலுக்கு ஆட்ப்படுத்தியது ராஜிவ் காந்தியின் படுகொலைதான். அந்தப் படுகொலைக்குப் பின்னர் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற காங்கிரஸ் கட்சி சார்ப்பாக நரசிம்மராவ் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பதவி ஏற்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அப்போதைய அமைச்சரவை செயலர் நரேஷ் சந்திரா, இந்தியாவின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி, எட்டு பக்க அறிக்கையை அவரிடம் கொடுத்திருக்கிறார். அந்த அறிக்கை தொடர்பாக தன்னுடைய நெருங்கிய ஆலோசகர் பி.சி. அலெக்சாண்டரிடம் நரசிம்மராவ் விவாதித்தபோது “சர்வதேச நிலையில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒருவரை நீங்கள் நிதி அமைச்சர் பதவிக்குப் பரிந்துரைக்கமுடியுமா?” எனக் கேட்டிருக்கிறார்.
அவர் பரிந்துரை செய்த பெயர் “ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக இருந்தவரும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸின் இயக்குநராகவும் இருந்த ஐ.ஜி.படேலின் பெயர். ஆனால், ஐ.ஜி.படேல் அதை ஏற்க மறுக்கவே அடுத்த இடத்தில் பரிந்துரை செய்யப்பட்ட பெயர்தான் மன்மோகன் சிங்.
1991 ம் ஆண்டு தன் முதல் பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்தான் நவீன இந்திய வரலாற்றில் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இன்றுவரை கருதப்படுகிறது.
மேலும் கொரோனா காலங்களில் “மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்து, பாதுகாப்பு நிலையை உறுதி செய்வதுடன், கணிசமான நேரடி ரொக்க உதவி அளிப்பதன் மூலம் அவர்களுக்குச் செலவழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும். அரசின் ஆதரவுடன் கூடிய கடன் உத்தரவாத திட்டங்கள் மூலம் தொழில் துறைக்கு போதிய மூலதனம் கிடைக்கச் செய்ய வேண்டும். நிறுவனத் தன்னாட்சி, செயல்முறைகள் மூலம் நிதித் துறைக்குப் பொறுப்பு அளிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கினார்.”