நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படத்திற்கு 3 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் விஜய் சேதுபதி முன்னனி நட்சத்திரமாக நடித்து வருபவர். இவர் அனைத்துவித கதை களத்திலும் நடிக்கும் வல்லமை பெற்றவராக உள்ளார். கதாநாயகன், வில்லன், தந்தை, குணச்சித்திர நடிகர் என பல்வேறு கதாபாத்திரத்திலும் நடித்து தமிழ் திரையுலகில் நீங்க இடத்தை பெற்று வருகிறார்.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார். உலக நாயகன் விக்ரம் திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் ஆராவாரத்தையும் பெற்றார். இயல்பான நடிப்பில் அனைவரையும் கவர்கின்றவராக விஜய் சேதுபதி இருக்கிறார்.

தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று பல விருதுகளை குவித்து வருகிறது. சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவது முறையாக சமீபத்தில் வெளியான படம் ‘மாமனிதன்’. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த். ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.
சமீபத்தில் மாமனிதன் படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருதுகள் 22-ல் சிறந்த ஆசிய திரைப்படத்திற்கான விருது கிடைத்த நிலையில் தற்போது மீண்டும் சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதுகள் கிடைத்துள்ளன. மாமனிதன் படத்தில் நடித்ததற்காக தாகூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை விஜய்சேதுபதி வென்றுள்ளார். மேலும் விமர்சகர் விருது (ciritc choice), சிறந்த சாதனைக்கான விருது (outstanding achievement award) என்ற இரண்டு பிரிவுகளில் இயக்குநர் சீனு ராமசாமிக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.