நாளை வெளயாகிறது விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் என படக்குழு அறிவிப்பு. கொரோனா மற்றும் நதி நெருக்கடி என பல பிரச்சனைகளால் இப்படத்தின் வெளியீடு தள்ளி போக ஓரு வழியாக சமாளித்து ஜூன் 24 ஆன நாளை ரீலிஸ் ஆகிறது.
சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் 4-வது முறையாக இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை காயத்ரி நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், சாஜி சென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

முதன் முறையாக இசைஞானி இளையராஜாவும் அவரது மகனுமான யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். தனது ஓவ்வொரு படத்திலும் பல பரினாமங்களில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்கள் மத்தியில் மக்கள் செல்வனாக உயர்ந்து வளர்ந்துள்ளார் என்றால் அது மிகையாகது. அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவும் மாறிவிடுகிறது.
உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவரின் கதாப்பாத்திரம் அனைவரின் ஆதரவையும் பெற்றது. அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும் அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பையும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகும் மாமனிதன் படத்தையும் வரவேற்போம்.