ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் 1500 மீட்டர் FREESTYLE நீ்ச்சல் போட்டியில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். அவர் 16.01.73 வினாடிகளில் கடந்து தேசிய சாதனையை முறியடித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் மேடி என்றால் அது நடிகர் மாதவனையே குறிக்கும் அந்த அளவில் தமிழக ரசிகர்களின் மனதில் பதிந்தவர் நடிகர் மாதவன் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும், இயக்குனராகவும் களம் கண்டு சமீபத்தில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ என்ற படத்தையும் இயக்கி அப்படத்தில் நடித்தும் உள்ளார்.
இந்நிலையில், தனது மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் கலந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். சமீபத்தில் நீச்சல் போட்டியில் தேசிய ஜூனியர் சாதனையை முறியடித்தார் என டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் உள்ள பிஜு பட்நாயக் நீச்சல் குளத்தில் நடைபெற்று வரும் 48வது ஜூனியர் நேஷனல் அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியில் 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் வேதாந்த் மாதவன் தேசிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார். தனது வெற்றியை பதிவு செய்ய, வேதாந்த் 16:01.73 வினாடிகளில் கடந்து 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அத்வைத் பேஜின் 16:06.43 வினாடிகளின் சாதனையை முறியடித்ததாக கூறப்படுகிறது.
போட்டியின் போது, அவர் 16:21.98 வினாடிகளில் கடந்து சென்ற கர்நாடகாவின் அமோக் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்த சுபோஜீத் குப்தாவை 16:34.06 வினாடிகளில் பின்தங்கினார். தனது வெற்றிப் பயணத்தின் வீடியோவைப் பகிர்ந்த மாதவன், “Never say never. 1500 மீட்டர் ஃப்ரீஸ்டைலுக்கான தேசிய ஜூனியர் சாதனை முறியடிக்கப்பட்டது” என்று தலைப்பிட்டார்.
Never say never . 🙏🙏🙏❤️❤️🤗🤗 National Junior Record for 1500m freestyle broken. ❤️❤️🙏🙏@VedaantMadhavan pic.twitter.com/Vx6R2PDfwc
— Ranganathan Madhavan (@ActorMadhavan) July 17, 2022
முன்னதாக, டென்மார்க் கோபன்ஹேகனில் நடந்த டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் வேதாந்த் மாதவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.