கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

0
45

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 16ம் தேதியான இன்று காலை 6.30 மணியலவில் நடைப்பெற்றது. உலக பிரசித்தம் பெற்ற இந்நிகழ்வினை காண கண் கோடி வேண்டும் என்று பக்தர்கள் வெள்ளத்தில் கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி தங்ககுதிரை பல்லக்கில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்நிகழ்வு தடை செய்யப்பட்டது. இப்போது தொற்று பரவல் இல்லாதால் வெகு விமர்சையாக மதுரையின் முக்கிய விழாக்கள் அனைத்தும் சிறப்பாக நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

மதுரை மீனாட்சி அம்மனின் சித்திரைத் திருவிழா ஏப்.05 கொடியோற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. ஏப.14 தேதியான நேற்று முன் தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கல்யாணம் சீரும் சிறப்புடன் நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து நேற்று திருத்தேர் வலம் வருதல் மக்கள் புடைசூழ நடந்தது.

கள்ளழகர் புறப்பாடுதல்

தங்கப்பல்லக்கில் கள்ளழகர் ஏப்.14 ம் தேதி மாலை கள்ளழகர் கோவிலிருந்து புறப்பட்டார். அவரை வரவேற்க வழி நெடுகிலும் பக்தர்கள் மலர்கள் தூவி வரவேற்றனர். நேற்று மூன்று மாவடியில் எதிர்சேவை முடித்து, தல்லாகுளம் வெங்கடாஜலபதி கோவிலில் இரவு திருமஞ்சனமாகி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்கொடி கையால் திருமாலைச் சாற்றி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

முன்னதாக வெள்ளை பட்டு உடுத்தி வெள்ளிகுதிரையில் வந்த வீரராகவ பெருமாள் கள்ளழகரை வரவேற்றார்.

சாபவிமோசனம் தருதல்

இன்று மதியம் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி நடக்கிறது, இரவு வண்டியூர் விரராகவ பெருமாள் கோவிலில் எழந்தருளுவார். நாளை காலை ஏப்.17 ல் 11.00 மணிக்கு தேனுரில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குகிறார்.

இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடக்கிறது. ஏப்.18 ம் தேதி இரவு பூ பல்லக்கில் கள்ளழகர் அழகர் கோவிலுக்கு  புறப்படுகிறார். ஏப்.20 அன்று மதியம் 12.05 மணியிலிருந்து 1.30 மணிக்குள் அழகர் கோவிலுக்கு திரும்புவார் என கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here