மகாளய அமாவாசை 2022 வழிபாட்டுக்கு உகந்த நேரம் மற்றும் நாள் ஆகியவற்றை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நாம் நினைக்கும் செயல்கள் சரியாக நடக்காமல் இருக்கலாம். அதற்கு சிலரது ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளது என்பர் அந்த தோஷத்தை போக்க மிகவும் சிறப்பான நாளாக மகாளய அமாவாசை காணப்படுகிறது. மகாளய பட்சம் என்றால் புண்ணிய காலம் என்பது பொருள். மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களுக்கு தொடர்ந்து 15 நாட்களுக்கு அவர்களை நினைத்து எள்ளு தண்ணீர் விட்டு தர்பணம் செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
இதை விளக்கும் கதை ஓன்று மகாபாரதத்தில் உள்ளது. உலகின் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கிய கர்ணனுக்கு அன்னதானம் அளிக்கும் வாய்ப்பு அமையவில்லை. போரில் இறந்து சொர்க்கம் சென்ற பின்னர் பசியில் தவிக்கிறான். அங்கு இருந்தோரிடம் பசிக்கிறது என்று கூறிய பொழுது அங்கு இருந்தவர்கள் “இச்சொர்கத்தில் யாருக்கும் பசி, தூக்கம், பிணி இருப்பதில்லை உனக்கு பசிக்கும் காரணம் எங்களுக்கு தெரியாது!” என்றனர்.

இவையனைத்தையும் கவனித்த தேவகுரு பிரகஸ்பதி கர்ணனிடம் வந்து அவன் ஆட்காட்டி விரலை சுவைக்குமாறு சொன்னார். அவன் பசி நின்றது! தனக்கு வந்த பசிக்கான காரணமும் அது நின்றது ஏன் என்று குருவிடம் கேட்டான்.
பிரகஸ்பதி “உலகில் பொன், பொருள், வைரம், என அனைத்தும் தானம் செய்த நீ ஒருநாளும் அன்னதானம் செய்யவில்லை. ஒருமுறை ஒருவர் அன்னதான இடத்திற்கு செல்ல கேட்ட பொழுது – அங்கே என்று உன் ஆட்காட்டிவிரலால் காட்டினாய், இதனால் உன் ஆட்காட்டி விரல் சுவைத்தும் உன் பசி நின்றது” என்றார். இதை கேட்ட கர்ணன் யமனிடம் வேண்டி மீண்டும் உருவம் கொண்டு 15 நாள் பூமிக்கு வந்து அன்னதானம் செய்தான். அது தான் இந்த மஹாளய பட்ச காலம்.
இதனால் யமதர்மன் “இந்த 15 நாட்கள் ஒருவன் பூமியில் செய்யும் தர்ப்பணம், அன்னதானம் அவரின் முன்னோர் மட்டுமின்றி இறந்த அனைவரின் பசியை போக்கும் என்றார்”.
இந்த மகாளய அமாவசையானது செப் 25ல் வருகிறது. அன்று நம்மால் முடிந்த அளவு ஏழைக்கு உடல் ஊனமுற்றவர்களுக்கு என பசி என்று வருபவர்க்கு உணவினை கொடுத்து பயன்பெறலாம்.