Mahindra Atom: இருசக்கரங்களுக்கு மாற்றாக நடுத்தர மக்களுக்கான மலிவுவான மின்சார கார் விரைவில் அறிமுகம் ஆக உள்ளதாக மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக வாகனங்களின் பெருக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. அதுமட்டும் இல்லாமல் கச்சா எண்ணொயின் தேவையும் அதிகரிக்கிறது. இதனால் பல நாடுகளிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் மிகவும் பாதிப்படைந்து காற்று மாசு ஏற்படுகிறது. டெல்லி போன்ற மாநிலங்கள் காற்று மாசு மற்றும் சூற்றுச்சூழல் பாதிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகனங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் உள்நாட்டின் வாகன உற்பத்திகளில் முதன்மையாக விளங்கும் மகேந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் ஆட்டம் என்ற வாகனத்தை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன் விலையும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் அதாவது 3 லட்சம் ஆகும் என்பதை மகேந்திரா நிறுவனம் கூறியுள்ளது.
ஓரு சிறிய குடும்பம் பல இன்னல்களில் பைக் போன்ற ஓரு வாகனத்தில் பயணம் செய்வதை காட்டிலும் இந்த மகேந்திரா ஆட்டம் இவி வாகனம் சிறப்பாக அமையும் என கருதுகிறது. அதன் அடிப்படையில் இந்த வாகத்தை 5 மணி நேரம் சார்ஜ் செய்தால் 120 கிமீ வரை பயணிக்கலாம் எனவும் இது விரைவில் சந்தைக்கு வர இருப்பதாகவும் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.