நிரந்தர பொதுச் செயலாளர் அம்மாதான் ஓ.பி.எஸ் உருக்கம்

0
20

நிரந்தர பொதுச் செயலாளர் அம்மாதான் ஓ.பி.எஸ் என அதிமுக ஓருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தர்மத்தை நம்பினேன், நீதிமன்றங்களை நம்பினேன், கழகக் கண்மணிகளை நம்பினேன், மக்களை நம்பினேன், எம்.ஜி.ஆர், அம்மாவின் ஆசிகளை நம்பினேன். அரசியல் கட்சியை அடாவடியாக யாரும் சட்டத்திற்கு புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் முக்கியமாக தெய்வமும் ஏற்றுக் கொள்ளாது என்பதை இந்த தீர்ப்பு நிரூபித்துள்ளது நிரந்தர பொதுச் செயலாளர் அம்மாதான் என்றும் கூறினார்.

ஓபிஎஸ்ஸுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், கோர்ட்டில் எடுத்து வைத்த அந்த முக்கிய வாதம் என்ன என்று ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு விவகாரம் இன்று முடிவுக்கு வந்துள்ளது.. இன்று தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.. கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பில் இன்று கூறியுள்ளது.

நிரந்தர பொதுச் செயலாளர் அம்மாதான் ஓ.பி.எஸ் உருக்கம்

அதேபோல, ஜுன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை எடப்பாடி தனியாக கூட்ட முடியாது.. அப்படியே கூட்டினாலும், அதற்கு ஓபிஎஸ் கையெழுத்து தேவை.. இந்த இடைப்பட்ட காலத்தில் எடப்பாடியின் நியமனங்கள் எதுவும் செல்லாது என்பதே இன்றைய தீர்ப்பாக உள்ளது.

நீதிமன்றம் சொல்லி உள்ள இந்த தீர்ப்பின்படிதான், இத்தனை காலமும் இரு தலைவர்களும் செயல்பட்டு வந்தனர். ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கிய பிறகுதான், எல்லாமே நடுவில் மாறியது. இனி, இருவரும் இணைந்துதான் எந்த ஒரு முடிவிலும் கையெழுத்து போட வேண்டும், இதில் தகராறு செய்ய முடியாது.. இதில் ஒருவர் கையெழுத்து போட்டு, இன்னொருவர் கையெழுத்து போடால் விட்டால், அது கட்சிக்கு சிக்கலாகிவிடும். இதன்மூலம் ஓபிஎஸ், இழந்த தன்னுடைய அதிகாரத்தை மீண்டும் பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here