ரஜினிகாந்த் 169 படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்படுகிறது

0
8

ரஜினிகாந்த் 169 படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்படுவதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் தென்னிந்தியாவில் மட்டும் இல்லாமல் தமிழ் பேசும் நாட்டிலும் இவர் தான் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இவருக்கு ஏராளாமான ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அனைத்திற்கும் காரணம் அவரின் ஸ்டைல் அவரின் ஸ்டைலுக்கு அவரின் நடிப்புக்கு மயங்காதவர்களே இல்லை.

இவரின் பல படங்கள் சூப்பர் ஹீட் வெற்றி பெற்று வசூலிலும் வாரி இரைக்கும். சமீபத்தில் இவர் நடிப்பு துறைக்கு வந்து 47 ஆண்டுகள் ஆனதை தனது வீட்டில் கேக் வெட்டி குடம்பத்துடன் கொண்டாடினார் என்பது நாம் அறிந்ததே.

இறுதியாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடி வெற்றி பெற்றது. அப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். இமான் இசையமைத்து இருந்தார். படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், லிவிங்ஸ்டன் என பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் 169 படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியிடப்படுகிறது

இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் தீலிப் குமார் இயக்கி இருந்தார். ரஜினிகாந்த்தின் 169 வது படமான ஜெயிலர் என்ற படத்தையும் நெல்சன் இயக்குகிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர் என்றும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ஜெயிலர் திரைப்படத்தின் அப்டேட் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர்கள் டிவிட்டர் இணையதளத்தில் இந்த செய்தியை டிரன்டிங் செய்து வருகின்றனர். மேலும் இப்படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here