மாளிகப்புரம்: மலையாளத்தில் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் ‘மாளிகப்புரம்’. பிறகு மற்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற இப்படம் மலையாளத்தில் 100 கோடி வசூல் செய்த படங்களில் 3வது படமாக இணைந்துள்ளது. 8 வயது சிறுமி சபரிமலைக்கு செல்ல முயற்சிப்பதும், திடீரென்று அதற்கு தடை ஏற்படுவதும், பிறகு அந்த தடை யாரால், எப்படி தீர்க்கப்படுகிறது என்பதும் தான் கதை. சபரிமலை ஐயப்பனின் அருமை, பெருமைகளை எடுத்துச்சொன்ன இப்படத்தை விஷ்ணு சசி சங்கர் இயக்கி இருந்தார். இது அவரது முதல் படமாகும்.
சூர்யா, ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்த ‘பேரழகன்’ என்ற படத்தை இயக்கிய சசி சங்கரின் மகன் விஷ்ணு சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாளிகப்புரம்’ படத்தில் உன்னி முகுந்தன், சிறுமி தேவானந்தா, சிறுவன் ஸ்ரீபாத்யான், சாஜூ க்ரூப், சம்பத் ராம், மனோஜ் கே.ஜெயன் நடித்திருந்தனர். விஷ்ணு நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, ரஞ்சின் ராஜ் இசையமைத்திருந்தார். அபிலாஷ் பிள்ளை திரைக்கதை எழுதினார். இப்படம் வரும் 15ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.