மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் விஜய்யின் லியோ படத்தில் இணைந்தார்

0
13

ஜோஜு ஜார்ஜ்: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லியோ’.

இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் உள்பட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

malayalam actor joju george joins thalapathy vijay's leo movie

காஷ்மீரில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதையடுத்து இப்போது சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் மிஷ்கின் உள்பட பல நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இப்போது மலையாள முன்னணி நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த வேடத்தில் முதலில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க இருந்தார். அவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் இது வில்லன் வேடம் என்பதால் அவர் நடிக்க மறுத்தார். அதன் பிறகே ஜோஜு ஜார்ஜ் நடிக்க தேர்வாகியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here