ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைந்து நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தில் முக்கிய ரோலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் முதன் முறையாக ரஜினிகாந்துடன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. கடலூர் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்ததது. படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து சென்னையில் உள்ள ஆதித்யா ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. பின்னர், இடைவெளி விடப்பட்டு பொங்கலுக்கு பிறகு தொடர்ந்து படப்பிடப்பு பணிகள் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 65 சதவீதம் முடிந்துள்ளது. முன்னதாக ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் உள்ள புகைப்படத்தை ரசிகர்களுக்காக வெளியிட்டது படக்குழு.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நெல்சன் தீலிப் குமார் இயக்கி வருகிறார்.
வருகிற ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிசர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் முதன் முறையாக ரஜினியுடன் முக்கிய ரோலில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பு பணிகள் வருகிற 8ந் தேதி தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ்க்கு ரஜினியுடன் இது நான்காவது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்னர் எந்திரன், பேட்ட, அண்ணாத்த இப்போது ஜெயிலர். அதே போல நெல்சன் தீலிப் குமாரும் சன் பிக்சர்சும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இணைந்த கூட்டணி தற்போது ஜெயிலர் படத்திலும் தொடர்ந்து இணைந்துள்ளது.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6: ஏடிகேவை வெளியேற்றி விடுவேன் என எச்சரித்த பிக்பாஸ்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.