தாஜ்மஹாலை விட அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம்

0
9

தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம் கொரோனா பொது முடக்கத்திற்கு பின் திறக்கப்பட்ட சுற்றுலா தலங்களில் தாஜ்மஹாலை விட அதிக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை கண்டுகளித்துள்ளனர்.

இதுவரை தாஜ்மஹாலை 38,922 பேர் பார்வையிட்டுள்ள நிலையில், 1,44, 984 பேர் மாமல்லபுரத்தை கண்டு ரசித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் மிக முக்கியமானதும் வரலாற்று சிறப்பும் வாய்ந்த சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வெண்ணை உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன் செஸ் ஓலிம்பியாட் போட்டிகள் இந்த மாமல்லபுரத்தில் அருகே உள்ள தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. அதனை ஓட்டி வெளி மாநில பயணிகளும் வெளிநாட்டு பயணிகளும் இநத புராதாண சின்னங்களை பார்த்து மகிழ்ந்தனர். இவ்விடத்தின் அருகே இருக்கும் கடலின் அழகையும் கண்டு களித்து வந்தனர்.

தாஜ்மஹாலை விட அதிக சுற்றுலா பயணிகளை ஈர்த்த மாமல்லபுரம்

இந்த செஸ் ஓலிம்பியாட் தொடரில் பங்குபெறுவதற்காக பல வெளிநாட்டு பயணிகளும் இப்பகுதியில் தங்கி மகிழ்சசியுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச காற்றாடி திருவிழா தொடங்கி நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா காரணமாக மாமல்லபுரம் மீண்டும் களைகட்டியது. இத்திருவிழாவை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுது. இதில் பார்வையாளராக பங்கேற்க மட்டுமே முடியுமே தவிர போட்டியாளர்களாக பங்கேற்க முடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் 6 அணியினர் இந்தியர்கள். மற்ற 4 அணியினர் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாட்டை சேர்ந்தவர்களாவார்கள். இதில் சிறார்களுக்கு டிக்கெட் இல்லையென்றாலும், இதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்திருக்க வேண்டும். திருவிழாவில் உணவு கடைகள், இசைக் கச்சேரி என பல என்டர்டெய்ன்மென்ட்கள் உண்டு. சுதந்திர தினத்தையடுத்து தொடர்ந்து விடுமுறை வந்துள்ள நிலையில், இந்த திருவிழாவுக்கு கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில், தாஜ்மஹாலை விட அதிக பார்வையாளர்கள் மாமல்லபுரத்தை கண்டு ரசித்துள்ளனர் என்ற தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here