காரின் ஸ்டியரிங் மீது மயங்கியவரை பத்திரமாக 25 கிலோ மீட்டர் கொண்டு சென்ற அதிசய கார். அதிர்ஷ்டவசமாக மயக்கத்தில் இருந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை நடந்து அவர் தற்போது நலமாக உள்ளார்.
வீட்டில் ஓரு நபராக வாகன ஓட்டிகள் தான் ஊர்ந்து பயணம் செய்யும் வண்டியை பார்ப்பது உண்டு. திரைப்படங்களிலும் காண்பதுண்டு முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த படிக்காதவன் படத்தில் ரஜினி தான் ஓட்டும் காருடன் பேசுவது போலவும் அதனை லஷ்மி என்று பெயர் வைத்தும் அழைப்பதும் அந்த வண்டியை தன் வீட்டில் உள்ள நபராகவும் காட்டப்பட்டு இருக்கும். தான் கூறும் விஷயங்களை அந்த கார் கேட்பது போலவும் தீய விஷயங்களுக்கு வண்டி ஸ்டார்ட் ஆகாது.
அதுபோல வாகன ஓட்டிகள் தாங்கள் பயணம் செய்யும் தன் வண்டிகளை நண்பனாக பார்ப்பது உண்டு. அது போல பெல்ஜியத்தில் 14ம் தேதி தன் முதலாளி கார் ஓட்டிய போது மயங்கி அந்த காரின் ஸ்டியரிங்கிலேயே வீழ்ந்து உள்ளார். அந்நிலையிலும் காரானது எவ்வித இடற்பாடும் இன்றி ஆபத்து ஏற்படுத்தாமல் சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் மெதுவாக பயணித்து அவரை காப்பாற்றி உள்ளது என்றால் நம்ப முடிகிறதா. ஆனால், இது உண்மை சம்பவமாக அரங்கேறி உள்ளது.

அந்த காரின் பெயர் ரெனால்ட் க்ளியோ மாடல், அதில் பயணித்த ரெனால்ட் காரில், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் அசிஸ்ட் உள்ளதால் எந்த தடங்களும் இன்றி கார் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.