மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

0
84

மனையடி சாஸ்திரம் என்றால் என்ன? வீடு கட்டுவது என்பது ஓரு கலை அதுவும் சொந்த வீடு இல்லாதவர்கள் புதிய வீடு கட்டுவதற்கு பல கனவு இல்லங்களை மனதில் கட்டி இருப்பர். அக்கனவினை புதிப்பித்து ஓரு வீடு கட்டுவதற்கு சாஸ்திரம் பார்ப்பர். அதாவது மனையடி சாஸ்திரத்தின் படி வீடு கட்டினால் பலன்கள் அதிகமாக பெற முடியும் என்பதனால் மனையடி சாஸ்திரத்தின் படி வீட்டினை கட்டுவர்.

மனையடி சாஸ்திரத்தின் படி வீடு கட்டும் போது பல வித துன்பங்கள் குறைந்து புதிய வீட்டில் காலெடுத்து வைக்கும் பொழுது புதிய புதிய மகிழ்ச்சி நெடுங்காலத்திற்கு நிலைத்து நிற்கவே மனையடி சாஸ்திரம் பார்க்கப்படுகிறது.

மேலும், மனையடி சாஸ்திரத்தில் வீடு எப்படி அமைய வேண்டும். சமையல் அறை, பூஜை அறை, படுக்கை அறை, கழிவறை, பொருட்கள் வைக்கும் அறை, குளியல் அறை, வீட்டின் மையப்பகுதி, குபேர பகுதி, போர் போடும் பகுதி என ஓவ்வொன்றும்  எங்கு அமைய வேண்டும் எந்த திசையில் அமைய வேண்டும் எத்தனை மாடிகள் இருக்க வேண்டும் எவ்வளவு நீளம், எவ்வளவு அகலம், சுவரின் நீளம் மற்றும் அகலம் என அனைத்தையும் மனையடி சாஸ்திரம் கூறுவது போல் அமைத்தால் நல்லது என்கின்றனர் நம் முன்னோர்கள்.

மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

மனையடி சாஸ்திரம் கூறும் தகவல்கள்:

இந்த உலகமானது பஞ்சபூதங்களை வித்தாக கொண்டது. அதில் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருள்கள் என எல்லாவற்றிலும் இதன் ஆதிக்கம் உள்ளது. ஒருவர் தான் வசிக்கும் வீட்டில் ஆரோக்கியம்., அமைதி, செல்வத்துடன் சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ இந்த மனையடி சாஸ்திரத்தின்படி வீட்டை அமைக்கும் பொழுது இவை எல்லாம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு வீடு கட்டும் பொழுது வடக்கு திசையில் தெற்கு திசையை விட அதிக இடம் விட்டு வீடு கட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் சுற்றுசுவர் அல்லது வீட்டில் மாடிச்சுவரானது தென்மேற்கு திசையில் ஒரு அங்குலமாவது உயர்ந்ததாக இருக்க வேண்டும். அதைவிட சற்று குறைவாக தென்கிழக்கு சுவர் அதைவிட குறைவாக வடமேற்கு சுவர் அதைவிட குறைவாக வடகிழக்கு சுவர் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனையடி சாஸ்திரத்தின்படி பூஜை அறை (Poojaa Room)

 • பூஜை அறையானது வீட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருப்பது நன்மை அளிக்கும்.
 • பூஜை அறையில் கடவுளின் படங்களை கிழக்கு திசை நோக்கி அமைத்தல் வேண்டும்.
 • சூரிய கதிர்கள் இறைவனை நோக்கி வர வேண்டும். மேலும் இந்த திசையில் சேமித்து வைக்கும் அறை (STORAGE ROOM) வைக்கலாம்.
 • இறைவன் படங்களை வடக்கு நோக்கியும் வைக்கலாம் என்கிறது மனையடி சாஸ்திரம்.
 •  இறந்தவர்களின் புகைப்படங்களை தெற்கு திசை நோக்கி வைத்தல் வேண்டும்.
 • இப்பகுதியில் சமையல் அறை, கழிவறை வைப்பது நல்லதன்று.

மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

துளசி மாடம் எவ்வாறு அமைக்க வேண்டும்:

 1. நம் முன்னோர்கள் வீடுகள் தோறும் துளசி மாடத்தினை வளர்த்தனர். பெரும்பாலான வீடுகளில் துளசி மாடம் இருந்தது.
 2. தற்போது வளர்ந்து வரும் சூழலுக்கேற்ப பல வீடுகளில் துளசி மாடம் இருப்பது இல்லை.
 3. துளசி ஓரு கிருமி நாசினயாகவும் காற்றை சுத்தப்படுத்தி நல்ல ஆக்சிஜனை தரக் கூடியது.
 4. துளசி எதிர்மறை சிந்தனைகளை தடுத்து நேர்மறையான சிந்தனைக்கு வழி வகுக்கும் ஆற்றலை உடையது.
 5. துளசி மாடம் கிழக்குத் திசை நோக்கி அமைத்தல் வேண்டும்.
 6. மருத்துவ குணம் கொண்ட துளசி மாடம் இருத்தல் மிகவும் நல்லது.

விளக்கேற்றும் திசை:

 • வீட்டில் விளக்கேற்றுதல் என்பது வெறும் வெளிச்சத்திற்கு மட்டும் அல்ல. மனதில் ஓரு புத்துணர்ச்சியை தருவதற்கும் பயனபடுகிறது.
 • வீட்டின் எதிர்மறை ஆற்றலை குறைத்து மங்களத்தை தரக்கூடியது.
 • துளசி மாடத்தில் விளக்கேற்றுவது சிறப்பு.
 • ஓரு விளக்கு ஏற்றுவதை தவிர்த்து இரண்டு விளக்குகள் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது.
 • காலை மற்றும் மாலை நேரங்களில் விளக்கேற்றுவது சிறப்பினை நல்கும்.
 • விளக்கினை கிழக்கு திசை நோக்கி ஏற்ற வேண்டும்.
 • தெற்கு திசை நோக்கி விளக்கேற்றுதல் கூடாது.

மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

படுக்கை அறை (Bedroom)

வீடுகளில் முக்கிய அறைகளில் ஓன்று படுக்கை அறை இவ்வறையில் தான் நாம் ஓய்வினை மேற்கொள்வோம் ஆகவே இவ்வறையில் ஓய்வெடுக்கும் நம் மனம் மிகவும் சாந்தமாக மகிழ்ச்சியாக நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை தரக் கூடிய அறையாக இருக்க வேண்டும்.

வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் இருப்பது நல்லது. மேலும், இவ்வறையில் வடக்கு திசை நோக்கி பணம் மற்றும் நகைகள் சேமிக்கும் அலமாரி அல்லது பீரோ வைப்பது மிகவும் நல்லது.

இரண்டு படுக்கை அறை வைக்கு விரும்புவோர் இரண்டாவது படுக்கை அறையை வடகிழக்கு திசை நோக்கி அமைக்கலாம். இளம் தம்பதியினர் தென்மேற்கு திசையிலும், வயதானவர்கள் வடகிழக்கு பகுதியிலும் அறையை அமைப்பது அவசியம்.

நாம் உறங்கும் போது கிழக்கு மற்றும் தெற்கு திசையில் தலை வைத்து படுத்து உறங்கலாம். வடக்கு திசை நோக்கி தலை வைத்து படுத்து உறங்குதல் கூடாது என்கிறது சாத்திர நூல்கள்.

இதையும் தெரிந்துகொள்ள: ஜாதக பொருத்தம் பார்த்தல் தமிழில்

குளியல் அறை (Bathroom)

தினமும் நாம் குளிக்கும் போது நம்மிடம் உள்ள துர்நாற்றம் நீங்கி மனதிற்கும் இனிமை தந்திடும் தின குளியல். குளியல் மூலம் உடலை சுத்தம் செய்து உடலில் உள்ள சூட்டை நீக்கி நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட வைப்பது.

இவ்வறையானது தென்மேற்கு திசையில் அமைக்காமல் வேறு எத்திசையில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.

சமையல் அறை (Kitchen)

பெரும்பாலும் சமையலின் மூலமே வீட்டில் கணவன் மனைவிக்குள் சண்டைகள் நிகழும். நாம் மேற்கொள்ளும் திசைகளின் வழியே நாம் திறம்படவும் ருசியாக மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவினை எடுத்து கொள்ளலாம்.

சமையல் அறை அக்னி மூலையில் இருத்தல் நல்லது. அதாவது அக்னி மூலை என்பது தென்கிழக்கு பகுதியாகும். தென்கிழக்கு பகுதியில் சமையல் அறையை வைத்து கிழக்கு திசையில் நின்று சமைப்பது நன்மை தரும் அமைப்பாகும். மேலும், வடமேற்கு பகுதியிலும் அமைக்கலாம்.

மனையடி சாஸ்திரம் பற்றி அறிவோம்

பாத்திரங்களை துலக்கும் சின்க் தொட்டியானது தென்கிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இருக்கலாம். பூஜை அறைக்கு அருகில் சமையல் அறை அமைக்கலாம். ஆனால், கழிவரை அருகில் சமையல் அறை அமைப்பது நல்லதல்ல.

கிணறு அல்லது போர் அமைக்கும் இடம்

உயிர் வாழ மிக முக்கியமானது தண்ணீர் ஆரோக்கியமான நீரை தரும் கிணறு அல்லது போர் அமைக்க வீட்டின் வடகிழக்கு பகுதியில் அமைத்தல் நல்லது. வீட்டின் நடுப்பகுதியில் அமைத்தல் நேர்மறை பலன்களை உண்டாக்கும். எனவே நீர் தேவைக்கு வடகிழக்கு பகுதி மிகுந்த பலனை வழங்கும் என்பதில் ஐயமில்லை என்கிறது சாஸ்திரம்.

தண்ணீர் சேமித்து வைக்கும் மேல்நிலை தொட்டியானது தென்மேற்கு பகுதியில் அதிக உயரத்துடன் இருத்தல் வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்க: ஓரை நேரங்கள்

மாடி ஏறுவதற்கான படிக்கட்டுகள்:

வீட்டில் படிக்கட்டுகள் மேற்கு அல்லது தெற்கு திசையில் கட்டப்பட வேண்டும். படிக்கட்டில் ஏறுவது கிழக்கில் தொடங்கி மேற்கு நோக்கி சென்றடைவதாக அல்லது வடக்கில் தொடங்கி தெற்கு நோக்கி ஏறுவதாக இருக்க வேண்டும்.வீட்டின் வடகிழக்கு அல்லது மையத்தில் படிக்கட்டை அமைக்கக்கூடாது.

மரங்களை வளர்க்கும் திசைகள்:

வீட்டின் தெற்கு அல்லது மேற்கு திசையில் மரங்களை வளர்ப்பது நல்லது. அதிலும் குறிப்பாக தெற்கு பகுதியானது மரங்கள் வளர்க்க உன்னதமானது என்று கூறப்படுகின்றது. அதேபோல் மரக்கிளைகள் வீட்டின் மேல் செல்வது சிறந்ததல்ல என்று கூறப்படுகிறது.

பொது தகவல்கள்:

மனையடி சாஸ்திரம் பற்றிய பொது தகவல்கள் – எந்தெந்த திசைகளில் எவை இருந்தால் நல்லது என்று பொதுவான தகவலாக பார்ப்போம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் வீடு வாங்குபவரின் 4 பாவத்தை பொறுத்தே துல்லியமாக சொல்ல முடியும்.

கிழக்கு – குடிநீர் தொட்டி
தென்கிழக்கு – சமையலறை
தெற்கு – படிக்கும் அறை
தென் மேற்கு , மேற்கு, தெற்கு – படுக்கையறை
வடமேற்கு – கழிவறை
வடக்கு – குபேரனுடைய திசை சுத்தமாக வைத்துக்கொள்ளவும்
வடகிழக்கு – குடிநீர் ஆதாரம் அமைக்கலாம்
வட கிழக்கு, கிழக்கு, மேற்கு – பூஜை அறை

Manaiyadi Sasthiram feet for House in Tamil

6 அடி – நன்மை உண்டாகும்
7 அடி – தரித்திரம் பிடிக்கும்
8 அடி – மிகுந்த பாக்கியம் உண்டாகும்
9 அடி – மிகுந்த பீடை ஏற்படும்.
10 அடி – பிணியில்லாத குறைவில்லா வாழ்வு
11 அடி – பாக்கியம் சேரும்
12 அடி – செல்வம் குலைந்து போகும்
13 அடி – எல்லோரும் பகைவராவர்
14 அடி – பெருநஷ்டம், சஞ்சலங்கள் ஏற்படும்
15 அடி – காரியம் தடை

16 அடி – மிகுந்த செல்வமுண்டு
17 அடி – அரசனைப்போல் பாக்கியஞ்சேரும்
18 அடி – அமைந்த மனை பாழாகும்
19 அடி – மனைவி மக்கள் மரணம்
20 அடி – இன்பம் தரும் இராஜயோகம் கிட்டும்

21 அடி – கல்வி சிறக்கும் பசுவிருத்தி உண்டாகும்
22 அடி – மகிழ்ச்சி பொங்கும், எதிரி அஞ்சுவான்
23 அடி – நோயுடன் வாழ்வான்
24 அடி – வயது குன்றும் மத்திம பலன்
25 அடி – தெய்வ பலன் கிட்டாது
26 அடி – இந்திரனை போல் வாழ்வார்
27 அடி – மிக்க செல்வத்துடன் வாழ்வார்
28 அடி – செல்வமும், தெய்வ அருளும் கிட்டும்

29 அடி – பால் பாக்கியம், செல்வம் சேரும்
30 அடி – லட்சுமி கடாச்சம் கிடைக்கும்
31 அடி – இறைவன் அருள் கிடைக்கும்
32 அடி – திருமால் (முகுந்தன்) அருள் பெற்று வாழ்வார்.
33 அடி – நன்மை உண்டு
34 அடி – குடிகள் விட்டொழியும் (தீமை பயக்கும்)
35 அடி – லட்சுமி கடாச்சம் உண்டு
36 அடி – அரசரோடு அரசாள்வார்
37 அடி – இன்பமும் இலாபமும் உண்டு
38 அடி – பிசாசுகள் குடியிருக்கும்
39 அடி – இன்பமும் சுகமும் உண்டாகும்
40 அடி – சலிப்புண்டாகும் (எப்போதும் சலிப்புடன் இருப்பார்)
41 அடி – இன்பமும் செல்வமும் உண்டாகும்
42 அடி – லட்சுமி குடியிருப்பால்
43 அடி – தீங்குண்டாகும்

44 அடி – கண் போகும்
45 அடி – சற்புத்திரர் உண்டு, சகல பாக்கியமும் உண்டாகும்
46 அடி – வீடு விட்டொழியும் தீமை உண்டாகும்
47 அடி – எந்த நலம் வறுமையாகவே இருக்கும்
48 அடி – வீட்டில் பிரச்சனை ஏற்படும்
49 அடி – மூதேவி வாசம் செய்வாள்
50 அடி – பால் பாக்கியம்

52 அடி – தான்யம் பெருகும்
56 அடி – வம்சம் பெருகும்
60 அடி – செல்வம் பெருகும்
64 அடி – சகல செல்வங்களும் சேரும்
66 அடி – சற்புத்திரர் பலன் கிடைக்கும்
68 அடி – இலாபம் உண்டாகும்
71 அடி – பெரும்புகழ் யோகம் சித்திக்கும்
72 அடி – செல்வம் சேரும்
73 அடி – குதிரைகள் கட்டி ஆட்சி செய்வர்
74 அடி – மிகுந்த செல்வம் உண்டாகும்
77 அடி – யானைகள் கட்டி வாழ்வான்
79 அடி – காளை விருத்தி
80 அடி – மகாலட்சுமி வாசம் செய்வாள்

84 அடி – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்
85 அடி – செல்வங்கள் பெருகி செல்வந்தராக வாழ்வார்
88 அடி – சௌபாக்கியத்துடன் வாழ்வார்
89 அடி – பல வீடுகள் கட்டி வாழ்வர்
90 அடி – யோகம் கிட்டும்
91 அடி – சகல சம்பத்தும் கிடைக்கும்
92 அடி – சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்
93 அடி – கடல் கடந்து பொருள் ஈட்டுவர்
95 அடி – வெளியூரிலிருந்து பணம் சேர்ப்பர்
96 அடி – அயலதேசம் செல்வார்
97 அடி – செல்வந்தராக வாழ்வார்
98 அடி – பல தேசங்கள் செல்வர்
99 அடி – ராஜ்ஜியம் ஆழ்வார்
100 அடி – இறைவன் அருள்பெற்று சமுதாயத்தில் சிறந்த மனிதனாக போற்றப்படுவர்.

பொதுவாக 6 அடிக்கு கீழ் கழிவறையை தவிர மற்ற அறைகள் இருக்க கூடாது என்பது மனையடி சாஸ்திர விதியாகும். அதே போல மேலே கூற பட்டுள்ள மனையடி சாஸ்திரம் அட்டவணை என்பது ஒரு அறையின் உள்ளடக்கமே ஆகும். சுவரின் அளவு இதில் சேராது. மொத்த வீட்டின் அளவில் சுவரின் அளவு சேர்ந்துவிடும். மேலே கூறப்பட்டுள்ள அளவுகளில் நன்மை தரக்கூடிய எண்ணிக்கையில் வீட்டின் அகலமும் நீளமும் அதே போல அறைகளின் அகலமும் நீளமும் இருப்பது நல்லது.

உதாரணமாக ஒரு அறையின் உள்ளளவு 10 அடி நீளம் 6 அடி அகலம் என்றால் அது நல்ல அளவு. ஆனால் 10 அடி நீளம் 7 அடி அகலம் என்றால் அது தீய பலன் தர கூடியதாக இருக்கும். ஏன் என்றால் 7 அடியில் அகலமோ நீளமோ இருந்தால் தரித்திரம் உண்டாகும் என்று கூறுகிறது மனையடி சாஸ்திரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here