‘Mankad Run Out’ இனி ரன் அவுட்டாக கருதப்படும் – ஐசிசி அறிவிப்பு

0
17

‘Mankad Run Out’ இனி ரன் அவுட்டாக கருதப்படும் இது போல புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது ஐசிசி.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியான பல விதிமுறைகளை அறிவித்துள்ளது ஐசிசி இந்த விதிமுறைகள் அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதன்படி, பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன்கள் பந்து வீசுவதற்கு முன்னதாகவே கீரிசை விட்டு வெளியேறினால் பவுலர் மன்கட் ரன் அவுட்டாக அதிகாரப்பூர்வ ரன் அவுட்டாக ஏற்றுக் கொள்ளப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.

பந்தை பளபளப்பாக வைக்க பவுலர்கள் எச்சில் கொண்டு பந்தை தேய்ப்பர் இதனை கொரோனா பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. இனி எச்சில் கொண்டு பந்தை தேய்த்தல் கூடாது ஐசிசி தடை உத்தரவு அளித்துள்ளது.

‘Mankad Run Out’ இனி ரன் அவுட்டாக கருதப்படும் – ஐசிசி அறிவிப்பு

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் அவுட் ஆன பின்னர் புதிதாக களத்திற்கு வரும் வீரர் பந்தை எதிர்கொள்ள தயாராக முன்பு 3 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. டி20 கிரிக்கெட்டில் இந்த விதிமுறை 90 வினாடிகளாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதையும் கவனியுங்கள்: IND VS AUS T20: இந்தியா தோல்விக்கு 2 காரணங்கள் ரோஹித் பேட்டி

ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் கேட்ச் முறையில் அவுட் ஆனால் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மேன்களை கிராஸ் செய்வது வழக்கம். புதிதாக வரும் பேட்ஸ்மேன் நேரடியாக ஸ்ட்ரைக் எடுப்பதை தவிர்க்கவும், ஆட்ட சூழலை புரிந்து கொள்ளவும் இது உதவும். தற்போது இந்த முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி பேட்ஸ்மேன்கள் ஒருவரை ஒருவர் கடந்திருந்தாலும் புதிதாக களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்தான் ஸ்ட்ரைக் எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்களின் கவனத்தை குலைக்கும் வகையில் பந்துவீச்சாளர் பந்து வீச ரன் அப்பில் இருக்கும் போது ஏதேனும் செய்தால் நடுவர்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் பெனால்டியாக வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.

அதேபோல பவுலர் பந்து வீசுவதற்கு முன்னர் பேட்ஸ்மேன் கிரீஸை விட்டு வெளியேறி விக்கெட்டுக்கு முன்னாள் வந்தால் பவுலர்கள் பந்தை டெலிவரி செய்வதற்கு முன்னர் த்ரோ செய்து பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்யலாம். இனி அப்படி செய்தால் அது டெட் பாலாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது டி20 கிரிக்கெட்டில் அமலில் உள்ள ஸ்லோ ஓவர் ரேட் முறை ஒருநாள் கிரிக்கெட்டிலும் வரும் 2023 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விளையாட்டு விதிமுறைகளை சவுரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி குழு பரிந்துரைத்துள்ளது. இந்த விதிகள் எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here