உலகளவில் இரண்டாமிடம் பிடித்த இயக்குனர் மணிகண்டனின் கடைசி விவசாயி திரைப்படம்.
2022 ம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று வெளியான படம் கடைசி விவசாயி. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய திரைப்படம். ஓரு கிரமத்தில் நடக்கும் விவசாயின் இன்னல்களை எளியமையான முறையில் நிதர்சனமாக காட்டிய படம். இதில் எண்ணபத்தி ஐந்து வயதானவராக நல்லாண்டியின் நடிப்பு வெகுவாக பாரட்டப்பட்டது.
விஜய் சேதுபதியும் இதற்கு முன் ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் இணைந்து இருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. ஈரோஸ் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகியது. 2016 ஆம் ஆண்டு படம் குறித்த அறிவிப்பு வெளியான போதிலும் பல இன்னல்களை சந்திக்க நேரிட்டு இவ்வாண்டு வெளியானது.

இன்னும் நலிவு நிலையிலிருந்து மீளாத விவசாயின் கவலையும் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்து சொன்ன இந்த படம் பலரது பாராட்டுக்களை பெற்றது. இதில் வரும் வசனங்களை மனதை உருக்கும் வண்ணம் இருந்தன. வழக்கமான ரொமாண்டிக் பீஜியம், அதிரடி இல்லாமல் போனதாலோ என்னமோ மக்களிடம் அதிக வரவேற்பை இந்த படம் பெறவில்லை.
இந்நிலையில், உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான LETTER BOXED வெளியிட்ட 2022 முதற் பகுதியில் சிறந்த படங்கள் பட்டியலில், விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான கடைசி விவசாயி திரைப்படம் 2 ம் இடத்தை பிடித்துள்ளது.
ஆர் ஆர் ஆர் திரைப்படம் 6 வது இடத்திலும், உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படம் 11 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.