நடிகை எமி ஜாக்சன் இடத்தை பிடிக்கும் முயற்சியில் மனிசா தைத்

0
2

மனிசா தைத்: மதராசபட்டினம் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சார்ந்தவர். மாடலிங் துறையில் இருந்து நடிக்க வந்தார். தொடர்ந்து தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ, 2.0 உள்பட பல படங்களில் நடித்தார். பிறகு திடீரென்று திருமணம் செய்து கொண்டு லண்டனுக்கே சென்றுவிட்டார். தற்போது அவருக்கு ஒரு மகன் உள்ளார். இப்போது சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். அருண் விஜய்க்கு ஜோடியாக ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் நடிக்கிறார்.

manisha daith photosஇந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் நடித்தவர் மனிசா தைத். இவர் பிரான்சை சேர்ந்தவர். அங்கு மேடை நாடகங்களில் நடித்து வந்தவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்போது ‘எ ஹோம் அவே ஃபிரம் ஹோம்’ என்ற தமிழ் படத்தில் மனிசா ஹீரோயினாக நடிக்கிறார். வெங்கடேஷ் குமார் இயக்குகிறார். இதில் நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடிக்கிறார்கள். கேரளா வயநாட்டில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. ‘எமி ஜாக்சன் விட்டுச் சென்ற இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா என கேட்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது’ என மனிசா தைத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here