உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்று மயிலாடுதுறை விவசாயி மகள் பரணிகா சாதனை.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் பகுதியை சேர்ந்த விவசாயி இளங்கோவன் மகள் பரணிகா தமிழ்நாடு தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் சென்னையில் ஜூன் 10 ம் தேதி நடந்தது. இதில் ‘போல்ட்வால்ட்‘ என்று அழைக்கப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் பரணிகா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இப்போட்டியில், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கான என பல மாநில போட்டியாளர்களும் போட்டியிட்டனர். அவற்றில் அனைவரின் உயரத்தை விடவும் அதிக உயரம் தாண்டி சாதனை மங்கையாக விவசாயி மகள் சாதனை புரிந்துள்ளார். அவர் தன் ஊருக்கு வருகையில் ஊர் மக்கள் அனைவரும் கூடி அவரை பாராட்டி ஆதரவு தெரிவித்தனர்.

பரணிகா தனது பள்ளி படிப்பை தன் ஊர் அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் பயின்ரார் தன் மேல் படிப்பிற்காக சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்து பி.காம் (B.COM) பயின்றார். அப்போது PET ஆசிரியர் தன்னை விளையாட்டில் ஈடுபட சொன்னார். நானும் அங்கு உயரம் தாண்டுதலான போல்ட்வால்டில் ஈடுபட்டேன். ஈடுபாடு இல்லாமல் முதலில் செய்தேன். பிஇடி ஆசிரியரான உமாதேவி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கடந்த 6 வருடமாக பயிற்சி மேற்கொண்டேன். உமாதேவி ஆசிரியர் எனக்கு மில்பர் என்ற பயிற்சியாளரிடம் அனுப்பி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதன்படி பயிற்சி செய்து இன்று தங்கப் பதக்கம் வாங்கி தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என் ஆசிரியர் உமாதேவிக்கும் என் பயிற்சியாளரான மில்பர் அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளேன் என்று கூறினார்.