இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

0
14

இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதனை ஆன்லைன் மூலம் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சத்தில் 78 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதினர்.தமிழ் ஆங்கிலம் இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு எழுதிய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வை எதிர் கொண்டனர்.

இன்று முதல் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களில் நீட் தேர்வுக்கு 17,972 பேர் விண்ண ப்பித்த நிலையில், 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தேர்வு எழுதியவர்களில் 4,447 (35%) பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20% முதல் 25% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 -23 ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான அரசு மருத்துவ இடங்கள் ,சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மருத்துவ இடங்கள் , சுயநிதி மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக மருத்துவ இடங்களில் இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் வருகிற அக்டோபர் 3ம் தேதி வரை மாணவர்கள் http://tnhealth.tn.gov.in மற்றும் http://tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம்.

இது போன்ற தகவல்களையும் மற்ற தகவல்களை பெறவும் தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here