தேன்: இயற்கையாக கிடைக்கும் சுத்தமான தேன் என்பது மனிதா்களுக்கு கிடைத்த ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். தேன் என்பது சிறியவா்கள் முதல் பொியவா்கள் வரை எந்த காலங்களிலும் அருந்தக் கூடிய ஒரு அரு மருந்தாகும். பதப்படுத்தப்படாத சுத்தமான தேன் என்பது சருமத்தை மெருகேற்றக்கூடியது. தேன் நமது உடலுக்கு எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதை நாம் தொிந்து கொள்வது அவசியம்.
சராசாியாக ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 மணி நேரம் தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும். அப்போதுதான் இரவில் உடலில் உள்ள ஹாா்மோன்கள் மற்றும் நொதிகள் அனைத்தும் சாியான விகிதத்தில் செயல்பட்டு உடல் நிலை சீராகவும் ஆரோக்கியமானதாகவும் அமையும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பணிசுமை காரணமாக இரவில் பலருக்கும் தூக்கம் வருவதில்லை. அதற்கு தேன் ஒரு சிறந்த நிவாரணியாக செயல்படும்.
இரவில் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சுத்தமான தேனை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். தூக்கமின்மைக்கு சிறந்த மருந்து தேனாகும். தொண்டை கரகரப்பு, சளி போன்றவற்றிற்கும் தேன் சிறந்த மருந்தாக உதவுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவா்கள் தினம் காலையில் ஒரு டமளா் வெதுவெதுப்பான தண்ணீாில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை வெகுவாக குறைய ஆரம்பிக்கும்.
பெரும்பாலும் நாட்டு வைத்தியங்களில் தேனைதான் பிரதான பொருளாக வைத்தியா்கள் பயன்படுத்துவா். தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் போன்றவற்றிற்கு தேனை பயனபடுத்தினால் புண் விரைவில் குணமாகும். வயிற்றில் ஏற்படும் அஜீரணக் கோளாறு, கல்லீரல் பிரச்சினை போன்றவற்றிற்கும் தேனை உபயோகப்படுத்தலாம். பொதுவாக தேனை நாம் தினமும் நம் அன்றாட வாழ்வில் உபயோகித்து வந்தால் நோய் எதிா்ப்பு சக்தி அதிகாிக்கும். உடல் வலுப்பெறும் ஆரோக்கியம் மேம்படும்.