பப்பாளி பழத்தில் காணப்படும் மருத்துவ குணங்கள் மற்றும் தீமைகள்: இயற்கை அன்னை தரும் அனைத்து காய்கறிகளும் பழங்களும் எவ்வித தீங்குகளும் இல்லா உணவுகள் என்றால் மிகையாகாது. மருந்து தெளிக்காத காய்கறிகள் மற்றும் பழங்கள் நம் உடலுக்கு நஞ்சை தராது. அவ்வகையில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் என்றும் உடலின் ஆரோகியத்திற்கு உறுதுணையாக விளங்கும் துளியும் ஐயமில்லை. அந்த வரிசையில் எண்ணற்ற மருத்துவ குணங்களை அள்ளி தரும் பப்பாளி பழத்தின் மருத்துவ குணத்தையும் அவற்றின் தீமைகளையும் இப்பதிவின் வாயிலாக அறியலாம்.
பப்பாளியில் உள்ள நன்மைகள்:
- பப்பாளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பீட்டா கரோட்டின் புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சி மூலம் அறியப்பட்ட உண்மையாக இருக்கிறது.
- ஆஸ்துமாவை தடுக்கும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று பீட்டா கரோட்டின் ஆகும். இது பப்பாளி பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.
- பப்பாளிப் பழத்தில் போதுமான அளவு வைட்டமின் சி உள்ளது இது சரும கட்டமைப்புக்கு ஆதாரமான கொலாஜன் உற்பத்திக்கு தேவைப்படுகிறது.

- பப்பாளியில் உள்ள சைமோ பாபைன் மற்றும் பபைன் என்ற புரோட்டோலிடிக் என்சைம்கள் காயங்களை குணப்படுத்தும் தன்மைக்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பு கின்றனர்.
- பப்பாளியின் என்சைம் கொண்ட களிம்புகள் டெகுபிடஸ் புண்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
- பப்பாளி கூந்தலுக்கும் மிகவும் நல்லது ஏனெனில் இதில் வைட்டமின் ஏ உள்ளது. தோல் மற்றும் முடி உட்பட அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
- பப்பாளி பழத்தை மேற்பூச்சாகப் பயன்படுத்தும் போது தீக்காயங்கள் குணமாவதை ஊக்குவிக்கவும் காயம் பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படமால் தடுப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- சிறுநாரக கல் பிரச்சனைகளுக்கு ஏற்றதாகவும் காணப்படுகிறது.
- பப்பாளி ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
- நார்ச்சத்து அதிகம் உள்ளதால் அதிக நன்மையை தருகிறது.
- கொழுப்பை எறித்து விடும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.
பப்பாளியில் உள்ள தீமைகள்:
- கர்பிணிப் பெண்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் கருகலைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
- சர்க்கரை நோயாளிகள் பப்பாளி பழத்தை அதிகம் உண்ணும் போது சர்க்கரையின் அளவை வெகுவாக குறைத்து விடுகிறது.
- நன்கு பழுக்காத பப்பாளி பழத்தை சாப்பிட்டால் அழற்சி ஏற்படுத்தும். நன்றாக பழுத்த பப்பாளியை உண்பது நல்லது.
இதையும் அறிந்து கொள்ளுங்கள்: புதினா இலையின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்
- அதிக அளவில் பப்பாளியை எடுத்து கொண்டால் மலட்டு தன்மை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
- அதிக அளவில் பப்பாளி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் வரக் கூடும். வயிற்று பிடிப்புகள், வயிறு வீக்கம், குமட்டல் போன்ற அளவுடன் சாப்பிடுவது நல்லது.
எவ்வித பழமாயினும் அளவோடு உண்ணும் பொழுது எவ்வித இடையூறும் நேர்வதில்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் உண்டு வந்தால் உடலை ஆரோக்கியமாக பேணலாம்.
இது போன்ற தகவல்களுக்கும், ஆன்மீகம், ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை படியுங்கள்.