விசாகப்பட்டினம். மெகாஸ்டார் சிரஞ்சீவி, ரவிதேஜா, ஸ்ருதிஹாசன், கேத்ரின் தெரசா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘வால்டர் வீரய்யா’. இந்த படம் வரும் 13ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய சிரஞ்சீவி, ‘இந்த ஊருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது பல படங்களின் படப்பிடிப்புகள் இங்குதான் நடந்துள்ளது. இந்த பட ஷூட்டிஙகையும் இங்குதான் நடத்தினோம். பீமிலி சாலையில் நிலம் வாங்கியிருக்கிறேன். இங்கு பங்களா கட்டும் பணியை தொடங்கியுள்ளேன். விடுமுறையின் போது வந்து தங்குவதற்கு இந்த வீட்டை பயன்படுத்திக் காெள்வேன்.இந்த ஊர் மக்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. எனது பல படங்கள் விசாகப்பட்டினத்தில் வசூலில் சாதனை படைத்திருக்கிறது’ என்று அவர் கூறினார்.
இந்த படம் வெளியாகும் அதே நாளில் பாலகிருஷ்ணா நடித்துள்ள ‘வீர சிம்ஹாரெட்டி’ படமும் வெளியாகிறது. ஒரே நாளில் இரண்டு ஸ்டார் நடிகர்களின் படங்கள் வெளியாகிறது. தமிழில் விஜய் மற்றும் அஜித் என இரு ஸ்டாரின் படங்கள் பொங்கலன்று வெளியாவது போல் டோலிவுட்டிலும் இரண்டு ஸ்டார்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.