மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது.

0
13

பாப் பாடகர்: அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் உலகம் முழுவதம் பிரபலமானவர். தனது அதிவேகமான நடன அசைவுகள், இனிய குரல் வளம், அடிக்கடி தன்னை புதுப்பித்துக்கொண்டு மேடையில் தோன்றுவது என்று தனது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்த அவர், பாடல் எழுதி இசை அமைத்து அதற்கேற்ப நடனம் ஆடுவதில் நம்பர் ஒன் அந்தஸ்தில் இருந்தார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்த மைக்கேல் ஜாக்சன், அவ்வப்போது சமூக சேவைகளிலும் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார்.

michel jackson biography to make as a movie

கடந்த 2009ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள தனது வீட்டில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த அவர் இன்றளவும் மக்களால் நினைக்கப்படுகிறார். அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படம் உருவாக்க கடந்த ஒரு வருட காலமாக தீவிர முயற்சிகள் நடந்தது. இந்நிலையில் இப்படத்தை கிரஹாம் கிங் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மைக்கேல் ஜாக்சனின் இசை ஆல்பங்களில் இடம் பெற்றுள்ள சில பாடல்களை இப்படத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். மைக்கேல் ஜாக்சனின் கேரக்டரில் நடிக்க அவரது சகோதரர் மகன் ஜாபர் ஜாக்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கிரஹாம் கிங் கூறுகையில், ‘கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாபர் ஜாக்சனை சந்தித்தேன். அவர் மைக்கேல் ஜாக்சனின் ஆளுமையையும், மேனரிசங்களையும் அப்படியே யதார்த்தமாக வெளிப்படுத்தினார். எனவே மைக்கேல ஜாக்சன் கேரக்டரில் நடிக்க அவர்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்தேன்’ என்று அவர் கூறினார். ஜான் லோஹன் எழுத, அன்டோயின் ஃபுகுவா இயக்க இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here