சலூன்: திரைக்கு வந்த தர்மபிரபு, கன்னிராசி ஆகிய படங்களை இயக்கிய முத்துக்குமரன் தற்போது இயக்கியுள்ள படம் ‘சலூன்’. இதில் மிரச்சி சிவா, யோகி பாபு, நயன் கரிஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்ய, சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார். இந்தர்குமார் தயாரித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் கூறியதாவது.
கடந்த 1930களில் ஆங்கிலேயர்களிடம் சவர தொழிலாளியாக பணியாற்றிய அய்யன்காளி என்பவருக்கு சில கனவுகளும், லட்சியங்களும் இருந்தன. அதை 1980 களில் வாழ்ந்த அவரது பேரன் காளை எப்படி நிறைவேற்றுகிறார் என்பது கதை. படத்தில் தாத்தா, பேரன் என்று இரட்டை வேடத்தில் மிரச்சி சிவா நடித்துள்ளார். அவரது நண்பராக யாேகி பாபு நடித்துள்ளார். மேற்குதொடர்ச்சி மலையில் பொதிகைமலைப்பட்டி என்ற தனி நாட்டை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம்.
ஒரு தலைமுறைக்கான சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை காமெடியுடன் சொல்லும் இப்படத்தில் பிளாஷ்பேக் பீரியட் காட்சிகளுக்காக மிர்ச்சி சிவா 10 கிலோ வரை உடல் எடை குறைத்து நடித்தார். அந்த கேரக்டர் மிகவும் சீரியசானது. அதில் மிர்ச்சி சிவாவின் வழக்கமான காமெடி இருக்காது. சமகால அரசியல் மற்றும் சமூக அவலத்தைச் சுட்டிக்காட்டும் படமான இதில் மற்றவர்கள் மனதைப் புணபடுத்தக்கூடாது என்று கவனமாக உள்ளோம் என்று கூறினார்.