கர்நாடகத்தைச் சேர்ந்த சினி ஷெட்டி மிஸ் இந்தியாவாக தேர்வாக மகுடம் சூடினார்.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாடு மையத்தில் மிஸ் இந்தியா அழகிகள் போட்டிகள் (VLLC) ஃபெமினா இதழ் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இதில் இந்தியா முழவதிலும் உள்ள மாநில அழகிகள் பங்கு பெற்றுகின்றனர்.
2021-2022 க்கான அழகியாக கர்நாடக மாநிலத்தை சார்ந்த சினி ஷெட்டி என்பவர் முதல் இடம் பிடித்து மிஸ் இந்தியா அழகியாக தேர்வாகி மகுடம் சூடினார். தொடர்ந்து, 2ம் இடத்தை ராஜஸ்தானைச் சார்ந்த ரூபல் ஷெகாவத் பிடித்தார். மூன்றாவது இடத்தை உத்திரப்பிரதேஷத்தைச் சேர்ந்த ஷினதா ஷெவ்கான் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் இடத்தை பிடித்த சினி ஷெட்டி என்பவருக்கு 21 வயதாகிறது. அவர் மும்பையில் பிறந்து கர்நாடகத்தில் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு முடித்து பரத நாட்டியம் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

முன்னாள் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் துபியா, மிஸ் இந்தியாவின் பயணம் “இந்தப் போட்டியின் மூலம் நாங்கள் பெற்ற விலைமதிப்பற்ற அனுபவங்களின் நினைவுகளை” மீண்டும் கொண்டுவருகிறது என்று கூறினார். இது மிகவும் உற்சாகம் மற்றும் சக்தி மற்றும் நேர்த்தியுடன் உலகை அணுகும் திறன் கொண்ட இந்த அழகான இளம் பெண்களுடன் எனது பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் மீண்டும் நினைவுபடுத்துவது போன்றது என்று கூறினார்.
பிரபலங்கள் நிறைந்த மாலையில் நடிகர்கள் கிருதி சனோன், லாரன் காட்லீப் மற்றும் ஆஷ் சாண்ட்லர் ஆகியோரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மணிஷ் பால் தொகுத்து வழங்கினார். VLCC ஃபெமினா மிஸ் இந்தியா 2022 க்கு செபோரா, மோஜ் மற்றும் ரஜினிகாந்த் பேர்ல்ஸ் ஆகியோர் ஆதரவு அளித்தனர்.