தமிழ் திறனறிவு தேர்வு: விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று முதன்மை மதிப்பெண் எடுக்கும் 1500 மாணவ மாணவியருக்கு மாத உதவி தொகையாக 1500 ரூபாய் கிடைக்கும் ஓர் அரிய வாய்ப்பு தவறவிடாதீர்கள்.
பள்ளி மாணவர்களின் தமிழ் மொழியின் திறனை அறியவும் மாணவர்களின் தனித்திறனை அதிகரிக்கும் வகையிலும் மாணவர்கள் தமிழ் மொழியின் திறனை மேம்படுத்தி கொள்ளவும் இத்தேர்வு வரும் அக்டோபர் 1ம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் தேர்வு நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் கிடைக்கிறது. இந்த விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க செப் 9ம் தேதியான இன்றே கடைசி நாளாகும்.

இதுவரை விண்ணப்பிக்காத மாணவ மாணவிகள் இன்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசின் 10ம் வகுப்பு தரநிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அம்மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாதம் ரூ.1,500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.
இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ/50- சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.