தூத்துக்குடியில் சைக்கிள் வீராங்கனைக்கு ரூ14 லட்சம் மதிப்பிலான சைக்கிளை பரிசாக அளித்த கனிமொழி.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரத்தை அடுத்த முப்பிலிவெட்டி என்ற கிரமத்தை சார்ந்தவர் ஸ்ரீமதி. இவர் தனது 13 வயதிலிருந்தே சைக்கில் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமிகுதியால் உள்ளூர் மற்றும் வெளியீர்களில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு பல பதக்கங்களை வாங்கியுளளார்.
மேலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் கலந்து கொண்டு வென்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொள்ள அரசால் தேர்வானார். ஆனால் அவரின் ஏழ்மைநிலையால் சைக்கிள் வாங்க இயலாததால் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழியிடம், தனக்கு சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி, 5 லட்சம் மதிப்புள்ள புதிய சைக்கிள் ஒன்றை வழங்கினார்.
கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடந்த டிராக் சைக்கிளிங் போட்டியில் கலந்து கொண்டு 3ம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். அதை கனிமொழி எம்பி யிம் காண்பித்து ஆசியும் வாங்கினார்.
ஆகஸ்ட் மாதம் இஸ்ரேலில் நடக்க விருக்கும் உலக ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தகுதியான சைக்கிள் வேண்டும் என மீண்டும் பாராளுமன்ற எம்பி கனிமொழியிடம் ஸ்ரீமதி கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில் அந்த மாணவிக்கு 15-லட்சம் மதிப்பிலான சைக்கிள், மற்றும் தலைக்கவசம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் தனது சொந்த செலவில் கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜூவன் உடனிருந்தார்.
இந்தியாவிலேயே இந்த சைக்கிளை பயன்படுத்த போகும் முதல் வீராங்கனை ஸ்ரீமதி என்பது குறிப்பிடத்தக்கது.