Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரங்கள் வாழ்க்கை வரலாறு அவர் கடந்து வந்த கிரிக்கெட் பாதைகள் அவர் பெற்ற விருதுகள் என அனைத்தையும் இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் உலகின் சச்சினை போல மதிக்கத்தக்க வீரராக ரசிகர்களால் கொண்டாடப்படும் வீரராக இருந்து வருபவர் மகேந்திரசிங் தோனி. உலக கிரிக்கெட் அணிகளின் கேப்டன்களையும் திரும்பி பார்க்க வைத்தவர். இதுவரை எந்த அணி கேப்டனாலும் பெற முடியாத சாதனையை நிகழ்த்தியவர் இவர். இந்திய அணிக்கு கேப்டனாக இருந்த போது ஓரு 50 ஓவர் உலக கோப்பையை வென்று தந்தவர். டி20 உலக கோப்பையையும் வென்றவர். மேலும், உலக சாம்பியன்ஸ் டிராபிக்கான கோப்பையையும் வென்று இந்திய அணியை சுகந்தரமாகவும் கூலாகவும் வழிநடத்தியவர் என்ற பெருமையை பெற்று திகழ்பவர் தமிழக ரசிகர்களால் தல தோனி என்று செல்லமாக அழைக்கப்படுபவர்.
இவர் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், சிறந்த பேட்டராகவும், சிறந்த கேப்டனாகவும் திகழ்ந்து மூன்று விதமான கோப்பையை இந்திய அணிக்காக பெற்று தந்தவர். தற்போது, சர்வதேச கிரிக்கெட்டிலுருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். எனினும், ஐபிஎல்-லில் சென்னை அணிக்காக மட்டும் விளையாடி வருகிறார். வருகின்ற 2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியுடன் ஐபிஎல் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவார் என தகவல்கள் வந்து கொண்டுள்ளது. இந்நிலையில், தேனியின் வரலாறு மற்றும் சொத்து மதிப்பு, கார்களின் விபரங்களை இப்பதிவில் அறியலாம்.

தோனியின் வாழ்க்கை வரலாறு:
மகேந்திர சிங் தோனி ஜூலை 7ம் தேதி 1981 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது பெற்றோர் பான் சிங் மற்றும் தேவகி தேவி. இவர் 2010 ஜூலை 4ம் தேதி சாக்ஷி சிங் ராவத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜூவா தோனி என்ற மகளும் இருக்கிறார்.
தோனியின் கிரிக்கெட் பயணம்:
இவர் ஜார்கண்ட் ரயில்வேக்காக ராஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி வந்தார். இவரது கிரிக்கெட் திறமையை கண்ட அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலி 2004ல் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஓருநாள் தொடரில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அவரது திறமை அந்த போட்டியில் எடுப்படவில்லை அதனால் ஓருசில போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தொடர்ந்து, விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் தனது திறமையை நிறுபித்து தோனி அப்போட்டியில் 148 ரன்களை தெரிக்க விட்டார். அனைவரது பார்வைகளும் தோனியை அதிர்ச்சியுடன் பார்த்தது. அதை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 300 ரன்களுக்கு மேலான சேசிங்கிற்காகா அதிரடி ஆட்டத்தை நிறுபித்த தோனி அந்த போட்டியில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 183 ரன்களை அடித்து தனக்கான இடத்தை தக்க வைத்து கொண்டார்.
2007 ஆம் ஆண்டில் நடந்த டி20 உலக கோப்பை போட்டியில் தான் கேப்டன் பொறுப்பு ஏற்றவுடனே இந்திய அணிக்கு கோப்பையை பெற்று தந்தார். இந்த செயல் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ஓருநாள் உலக கோப்பைத் தொடரையும் இவரது அணி கோப்பையை வென்று தந்தது. தொடர்ந்து 2013ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஸ் ஷிப் போட்டியிலும் கோப்பையை வென்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
சச்சினை கிரிக்கெட்டின் கடவுளாக பார்த்து வந்த நிலையில், அவருக்கு அடுத்த இடத்தை பெற்று சிறப்புடன் செயல்பட்டார். இந்நிலையில், தோனி 15 ஆகஸ்ட் 2020, முன்னாள் இந்திய கேப்டன் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இருப்பினும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
ஐபிஎல் போட்டிகளிலும் தனித்து விளங்கிய தோனி கேப்டன் சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை நடந்த போட்டிகளில் 4 முறை கோப்பையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு வருடம் சிஎஸ்கே தடை செய்யப்பட்ட போது புனே அணிக்காக விளையாடினார். இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நாயகனாகவும் கூல் கேப்டனாகவும் மிளிர்ந்து பல வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.
தோனியின் சொத்து மதிப்பு:
இவர் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் பணக்கார பட்டியலில் இரண்டாவதாக இருந்து வருகிறார். முதல் இடத்தில் சச்சின் இருக்கிறார். ஓய்வுக்குப் பின், அவரது ஐபிஎல் சம்பளம் மற்றும் பிராண்ட் ஒப்புதல் ஒப்பந்தங்கள் ஆகியவை அவரது மிகப்பெரிய வருமான ஆதாரங்களாகும். ஒரு மதிப்பீட்டின்படி, 2022 ஆம் ஆண்டு தோனியின் நிகர மதிப்பு சுமார் $115 மில்லியன் – INR 920 கோடி. இவரது ஆண்டு வருமானம் 50 கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
ஐபிஎல்-லில் தோனியின் சம்பளம்:
2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில்Ms Dhoni பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடன் 12 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
தோனியின் பிரான்டு ஓப்பந்தம்:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் தோனியும் ஒருவர். எனவே, ஒவ்வொரு பெரிய பிராண்டும் அவருடன் இணைந்திருக்க விரும்புகிறது. இது அவரது பிராண்ட் மதிப்புக்கு நிறைய சேர்க்கிறது மற்றும் அவரது ஒப்புதல் போர்ட்ஃபோலியோவில் உள்ள பிராண்டுகளின் நீண்ட பட்டியல் இந்த உண்மையை நிறுவுகிறது.
முன்னாள் இந்திய கேப்டன் தற்போது Turtlemint, G Square Housing, Homelane, Oreo, 7Ink Brews, Dream11, Oppo, Powerade, Cars24, Indian Terrain, RedBus, Colgate, Indigo Paints, Go Daddy, Bharat Matrimony, Master India உள்ளிட்ட பல சிறந்த பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். , Snickers, NetMeds.com, Gulf Oil India மற்றும் பல.
எம்.எஸ். தோனி வைத்துள்ள கார்கள்:
Ms Dhoni ஒரு கார் மற்றும் பைக் பிரியர் என்றே சொல்லலாம் எனவே அவர் கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ள அவரது மிகப்பெரிய இயந்திரங்களின் தொகுப்பில் அது பிரதிபலிக்கிறது.
Hummer H2, Audi Q7, Mitsubishi Pajero SFX, Land Rover Freelander 2, Ferrari 599 GTO, Nissan Jonga, Pontiac Firebird, Mercedes Benz GLE, Rolls Royce Silver Shadow உள்ளிட்ட பல சூப்பர் கார்களை அவர் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எம்எஸ் தோனி பல சூப்பர் பைக்குகளையும் வைத்திருக்கிறார்.
தோனியின் வீடு:
முன்னாள் இந்திய கேப்டனுக்கு ராஞ்சியில் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு வீடு உள்ளது. அதுமட்டுமின்றி, அவர் தனது வீட்டிலிருந்து சில நிமிட பயணத்தில் ஒரு பண்ணை வீட்டையும் வைத்திருக்கிறார். மும்பையில் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது.
தோனி பெற்ற விருதுகள்:
எம்.எஸ்.தோனி பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, ராஜூவ் காந்தி கேள் ரத்னா விருது, யூத் ஐகான் விருது மற்றும் 2011ம் ஆண்டு De Mantfort பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இதையும் படியுங்கள்: கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சொத்து மதிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் தனக்கென இடத்தை பெற்று ரசிகர்களாலும் கிரிக்கெட் ஜாம்பவான்களாலும் பாராட்டக் கூடிய அளவில் செயல்பட்டவர் இவரை பெற்றதில் இந்தியா பெரும் பாக்கியம் அடைந்துள்ளது என்றே சொல்லலாம்.
இதையும் படியுங்கள்: டி20 உலக கோப்பை முடிந்துள்ள நிலையில் ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியல்
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.