எல்ஜிஎம்: தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் எல்ஜிஎம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் திரைப்படம் ‘எல்ஜிஎம் (லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் ‘எல்ஜிஎம்’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், லவ் டுடே இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விஸ்வஜித் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரமேஷ் தமிழ்மணி இசையமைக்கிறார். சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை மையமாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த திரைப்படத்தை தோனி தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 28ம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் எல்ஜிஎம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று இரவு 7 மணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். இதை அவரது ரசிகர்கள் இணையத்தில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.