தென் இந்திய திரைப்படங்களை தயாரிக்க உள்ள தோனி இவர் ஏற்கனவே தோனி என்டர்டைமண்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் சில தொடர்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது தென் இந்திய படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்.
தோனி இந்திய கிரிக்கெட்டில் இவரை தெரியாதவர் இருக்க மாட்டார்கள் மேலும் அவரின் நடத்தைகள் மற்றும் விளையாடும் விதம் என அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும். சிறந்த கேப்டனாகவும் கூல் கேப்டன் என்றும் தல என்றும் ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
இவர் இந்திய அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்த பொழுது பல வெற்றிகளை இந்திய அணி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தோனி இப்போது அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். தனக்கு பிடித்த வாழ்வை வாழ்ந்து வருகிறார். விவசாயம், கோழி வளர்ப்பு என தன் ஆர்வத்தை அதன் மீது செலுத்தி வருகின்றார்.

தற்போது ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். விளம்பரங்களில் நடித்து வந்தும் உள்ளார். இந்நிலையில், இவரின் தோனி என்டர்டைமண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இந்த நிறுவனம் ‘ரோர் ஆஃப் லயன்’ என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனை தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ‘ப்ளேஸ் டு க்ளோரி’ (‘Blaze to Glory) என்ற ஆவணப்படத்தையும் மற்றும் ‘தி ஹிடன் இந்து’ (The Hidden Hindu) என்ற புராணத்தை அடிப்டையாகக் கொண்ட ஒரு திரில்லர் படத்தையும் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், தோனி, தன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தென்னிந்திய திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகும் திரைப்படங்களை தயாரிக்க ஈடுபாடு கொண்டு உள்ளதாக தெரிகின்றது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வரவில்லை. விரைவில் அறிவிப்பார் எனவும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக தோனி, நடிகர் விஜயை வைத்து திரைப்படம் ஓன்றை தயாரிக்க உள்ளதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது. தோனி கிரிக்கெட்டில் மட்டும் அல்ல அனைத்து துறைகளிலும் தடம் பதித்து வருபவர் என்பதை இதன் மூலம் அறியலாம்.