ஐபிஎல் 2022 எனப்படும் இந்தியன் பீரிமியர் லீக் (IPL) ஆட்டங்கள் முதல் போட்டியிலிருந்து பரப்பரபாக காணப்படுகிறது. இந்த ஆண்டு 2 அணிகள் புதியதாக சேர்க்கப்பட்டது. அதிலும் இந்த வருட போட்டியில் CSK வீரா்கள் முதல் அனைத்து வீரா்களும் கலைக்கப்பட்டு அனைவரும் வேறுவேறு அணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிட தக்கது.
2022 புதியதாக சேர்க்கப்பட்ட அணிகள் ஓன்று லக்னோ சூப்பர் ஜெய்ன்ட் அணி, குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக குஜராத் அணி விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இவ்வணியே.

5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 2022 IPL லில் 8 போட்டிகளில் ஓன்றில் கூட வெற்றி பெற முடியாமல் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறியது. அதுவும் முதல் 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்த முதல் அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது மும்பை ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ப்ளே ஆஃப் சுற்று மங்கி வருவதாகவும் கிரிக்கெட் ஆர்வளர்கள் கூறுகின்றனர். லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வியை சந்தித்த நிலையில், சென்னை அணிக்கான ப்ளே ஆஃப் வாய்ப்பு குறைந்து வருகிறது.
தற்போது 5 வெற்றிகளை பெற்றுள்ள லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 4-ஆவது இடத்தில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியானது வெற்றியை தன் வசப்படுத்தியிருந்தால், தற்போது 4 ஆவது இடத்தில் இருக்கும் லக்னோ அணி, குறைந்த புள்ளிகளையே பெற்றிருக்கும். இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பு பிரகாசமாயிருக்கும்.
ஆனால் அவ்வாறு இல்லாத நிலையில், இனி வரும் எல்லா ஆட்டங்களிலும் சென்னை (CSK) அணி வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றில் நுழைவதற்கு வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.