என் மனைவியின் ஓளி என் மீது எப்போதும் பட்டுக் கொண்டே இருக்கும்-சூர்யா

0
15

என் மனைவியின் ஓளி என் மீது எப்போதும் பட்டுக் கொண்டே இருக்கும் என நடிகர் சூர்யா டெல்லியில் நடைபெற்ற சூரரைப் போற்று படத்தின் தேசிய விருது பெற்ற பின் பேச்சு.

சூரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த விருதுகளை டெல்லியில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவிற்கு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கு ஏற்று அனைவருக்கும் விருதுகளை வழங்கினார்.

இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற விருதுக்கு இப்படத்தின் கதாநாயகன் சூர்யாவிற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான 2டி என்டெர்டென்மன்ட் நிறுவனத்தின் நிறுவனர் ஜோதிகாவிற்கும், சிறந்த கதநாயகியாக இப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கும், இப்படத்தின் சிறந்த இசையமைப்புக்காக ஜி.வி.பிகாஷ்க்கும், இப்படத்தினை இயக்கிய சுதா கொங்கோரா என்பவருக்கும் என ஐந்து விருதுகளை 68வது தேசிய விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் வழங்கி அவர்களை கௌரவித்தார்.

என் மனைவியின் ஓளி என் மீது எப்போதும் பட்டுக் கொண்டே இருக்கும்-சூர்யா

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடித்த படங்கள் அனைத்து சிறப்பாக இருக்கும். கொரோனா காலகட்டத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் ஜெய் பீம் என்ற படமும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற படமாக இருக்கின்றது.

ஜெய் பீம் படமும் பல விருதுகளை வாரி குவித்து வருவது குறிப்படத்தக்கது. இந்த படத்தில் வரும் கதை நிஜக்கதையின் கருவூலமாக இருந்ததால் அனைத்து ரசிகர்களாலும் பேசப்படும் படமாக இருந்தது.

சூர்யா நடிப்பிலும் சிறப்பான நடிகராக இருந்து வருகின்றார். அது மட்டும் இன்றி ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உதவுபராகவும் அகரம் என்ற கட்டளையை தானே நடத்தி வருகின்றார். இதில் பல ஏழை எளிய மாணவ மாணவிகள் கல்வியை இலவசமாக பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இந்த தேசிய விருதை பெற்ற பிறகு பேசிய போது என் மனைவியின் ஓளி எப்போதும் என்மீது பட்டு கொண்டே இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் கதையை முதன் முதலாக என் மனைவி தான் கேட்டார். அவர் மேடையில் விருது வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி என்றும், இந்த படம் மற்றும் இந்த விருது என் ரசிகர்களுக்கும், என் நலம் விரும்பிகளுக்கும் சமர்பணம் எனறும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here