ஐதராபாத்: தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நானி. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். அவரும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி ஹீரோஆவார். அதுவும் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் அவர் உலக அளவில் பிரபலமடைந்து விட்டார். நானி, ராம்சரணை பற்றி பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் வாரிசு விவகாரம் தொடர்பாக ராம்சரணை நானி வம்புக்கு இழுத்ததால் அவரது ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். நானி, ராணா ஆகியோர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த நானி, ‘இந்த விஷயத்தில் நான் என்னை ராம்சரணுடன் ஒப்பிட்டு பேச விரும்புகிறேன். நான் நடித்த முதல் படத்தை வெறும் 1 லட்சம் பேர்தான் பார்த்தார்கள். ராம்சரண் நடித்த முதல் படத்தை பல கோடி பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் உங்களுக்கு எல்லாம் விளங்கும்’ என்றார்.
இந்த பதிலை கேட்ட ராம்சரண் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். சமூக வலைதளங்களில் நானிக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். நானி யதார்ததமாகவே இப்படி கூறியிருக்கிறார் என அவரது ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.