கோல்டன் குளோப் விருதை வென்ற நாட்டு குத்து பாடல்

0
10

கோல்டன் குளோப் விருதை வென்ற நாட்டு குத்து பாடல் இதன் மூலம் ஆர்ஆர்ஆர் திரைப்படக் குழுவினர் பெரும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

RRR படம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், சமுத்திரக்கனி, ஸ்ரோயா, ஆலியாபட் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், திரைத் துறைக்கு ஆஸ்கருக்கு அடுத்தப்படியான கோல்டன் விருது சிறப்பு வாய்ந்தது. அந்த விருதை ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் பெற்று இந்திய திரைத்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.

கோல்டன் குளோப் விருதை வென்ற நாட்டு குத்து பாடல்

இந்த விருதுக்கு ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது. ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவிலும் தேர்வாகி இருந்த நிலையில், தற்போது நாட்டு நாட்டு பாடல், சிறந்த பாடல் பிரிவில் கோல்டன் குளோப் விருது வென்று அசத்தியுள்ளது.

இவ்விருதை RRR திரைப்படத்தின் ஓட்டு மொத்த படக்குழுவும் கூடி லாஸ் ஏஜ்ல்ஸில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பதிவு செய்தது. பின்னர் இவ்விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி பெற்றார்.

மேலும், 95வது ஆஸ்கர் விழாவுக்கும் ஒரிஜினல் பாடல் பிரிவின் இறுதி பட்டியலுக்கு ‘நாட்டு நாட்டு’ பாடல் தேர்வாகியுள்ளது. இந்த விழா இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

இதையும் படியுங்கள்: துணிவு, வாரிசு முதல் காட்சிகளை பார்த்த (FDFS) திரைப்பிரபலங்கள்

ஏற்கனவே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏஆர் ரஹ்மான் கோல்டன் குளோப் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here