நாக சைதன்யா: நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து மணந்தார். கருத்து வேறுபாடால் இவர்கள் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் நாகசைதன்யா தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களிடம் ஜென்டில்மேனாக நடந்து கொள்வார்.
அவர்களை கட்டிபிடிக்கும் காட்சியில் நடித்தாலும், முத்தக் காட்சியில் நடித்தாலும் உடனே மன்னிப்பு கேட்பார் என சொல்கிறார் நடிகை தக்ஷா நகர்கர். பாங்கராஜூ படத்தில் நாக சைதன்யா ஜோடியாக தக்ஷா நடித்திருந்தார். அவர் கூறியதாவது.
பாங்கராஜூ படத்தில் நாகசைதன்யாவுடன் நடித்தேன். நான் நடித்த ஹீரோக்களில் நாகசைதன்யா வித்தியாசமானவர். பெண்களை மதிக்கும் தன்மை கொண்டவர். படத்தில் என்னை கட்டிப்பிடிக்கும் காட்சிகளில் நடித்தபோதும், முத்தக்காட்சிகளில் நடித்த போதும் மன்னிப்பு கேட்டுத்தான் நடிப்பார்.
இது முழுக்க முழுக்க அவரது மரியாதைக்குரிய தன்மையை காட்டுகிறது. அவரது வாழ்க்கையில் சில சோகங்கள் நடந்து விட்டது. அது எனக்கு வருத்தம் தந்தது. இப்போது அதிலிருந்து அவர் மீண்டு இருப்பது ஆறுதலாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.