மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றல் அவசியம்-முதல்வர்

0
14

மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றல் அவசியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்து வரும் மாணவர்கள் ஆங்கில புலமை இல்லாமல் இருப்பது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

தாய் மொதி தமிழ். உலகோடு நம்மை இணைக்கக் கூடிய மொழி ஆங்கிலம். இந்த இரண்டு மொழிகளையும் மாணவர்கள் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டியது அவசியம். கல்லூரி படிப்பை முடித்து வரும் மாணவர்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது ஆங்கில பேச்சாற்றல்.

ஆங்கிலத் திறன் குறைவாக இருப்பதால் மாணவர்களுக்கு தாழ்வு மன்பான்மை ஏற்படுகிறது. எனவே நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில பேச்சாற்றல் என்ற பாடத்திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படும்.

மாணவர்களுக்கு ஆங்கில மொழியாற்றல் அவசியம்-முதல்வர்

ஆங்கிலம் மட்டும் இன்றி ஜப்பானியம், ஜெர்மன், பிரன்ஞ் மொழி பயிற்சிகளும் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார் முதல்வர். தமிழ்நாடு முதலமைச்சர், இன்று (29-8-2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “நான் முதல்வன்” என்னும் மாபெரும் திறன் மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து இவற்றை கூறினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர், ” தமிழ்நாட்டு இளைஞர்களைப் படிப்பில்,சிந்தனையில், ஆற்றலில் மேம்படுத்துவது இட்த்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நான் மட்டும் முதல்வன் அல்ல; அனைவரும் ஒவ்வொரு வகையிலும் முதல்வனாக வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்டதே இத்திட்டம். என்னுடைய கனவு திட்டமான இது, தற்போது செயல்வடிவம் பெற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here