ஓரே போட்டியில் 9 சாதனைகளை முறியடித்த நாராயணன் ஜெகதீசன் விஜய் ஹசாரே கோப்பைக்காக நடைபெறும் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாடி வருபவர நாராயணன் ஜெகதீசன் அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பல சாதனைகளை குவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் விஜய் ஹசாரே தொடருக்கான போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளில் 38 அணிகள் பங்கு பெற்று அணியின் திறமையை நிலை நாட்டி வருகின்றது. இந்நிலையில், இந்த தொடரில் தொடர்ந்து 5 சதங்களை அடித்து சிறப்பான துடுப்பாட்டத்தை நிகழ்த்தி வருகிறார். தமிழக அணியின் வீரர் நாராயணன் ஜெகதீசன். அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பல சாதனைகளை உரிதாக்கி உள்ளார்.
277 ரன்கள் – இந்த போட்டியில் 141 பந்துகளில் 15 சிக்சர்கள், 25 பவுண்டரிகள் என மொத்தம் 277 ரன்களை எடுத்தார் நாராயணன் ஜெகதீசன். இதன் மூலம், லிஸ்ட் ஏ கிரிகெட் போட்டியில், ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகப்பட்ச ரன்கள் என்ற சாதனையை முறியடித்தார். இதற்கு முன்னர் ஏடி பிரௌன் எடுத்த 268 என்ற ஸ்கோரே அதிகபட்ச ரன்களாக இருந்தது.

இதற்கு முன்னர் குமார் சங்ககரா, அல்விரோ பீட்டர்சன், தேவ்கத் படிக்கல் ஆகியோர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இவர் தற்போது வரை தொடர்ந்து 5 சதங்கள் அடித்து இச்சாதனையை மாற்றியுள்ளார்.
இங்கிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 498 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. பிரிவு ஏ அணியில் முதன் முறையாக ஓரு அணியின் முதல் 506 ரன்கள் எடுத்து சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
114 பந்துகளில் இரட்டை விளாசிய நாராயணன் ஜெகதீசன் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹட்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
ஸ்ட்ரைக் ரேட் 196.45 – இந்த போட்டியில் விளையாடிய ஜெகதீசன் நாராயணன், 141 பந்துகளில் 277 ரன்களை எடுத்தார். இதன் மூலம், அதிக ஸ்ட்ரைக் ரேட்டுடன் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஜெகதீசன். இதற்கு முன்னர் டிராவிஸ் ஹெட் 181.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியதே சாதனையாக இருந்தது.
தமிழக வீரர்கள் ஜெகதீசன் – சாய் சுதர்ஷன் ஜோடி, இன்றைய போட்டியில் முதல் விக்கெட் பாட்னர்ஷிப்பிற்கு 416 ரன்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் – மார்லன் சேமியூல்ஸ் ஜோடி 372 ரன்களை எடுத்ததே சாதனையாக இருந்தது.
விஜய் ஹசாரே கோப்பையில் இதுவரை விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரூத்ராஜ் கெய்க்வாட், ப்ரித்திவிஷா ஆகியோர் தொடர்ந்து 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது தற்போது நாராயணன் ஜெகதீசன் 5 சதங்களை தொடர்ந்து அடித்து சாதனையை முறியடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Ms Dhoni: சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் உள்ள கார்களின் விபரம்
விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 12 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது இதில் ஜெகதீசன் 15 சிக்சர்கள் விளாசி ஓரு போட்டியில் அதிக சிகசர்கள் அடித்த நபர் என்ற சாதனையும் தனதாக்கி கொண்டார்.
799 ரன்கள் – இதுவரை ஜெகதீசன் 799 ரன்களை எடுத்துள்ளார். இந்த கோப்பையில் ஒரு வீரர் எடுக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்னர் ப்ரித்வி ஷா 2020 – 2021 சீசனில் 827 ரன்களை எடுத்ததே சாதனையாக இருக்கிறது.
இது போன்ற பல தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.