5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

0
13

5ஜி சேவையை டெல்லியில் நடைபெற்ற 6வது மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பாரத பிரதமர் மோடி 5ஜி இணைய சேவையை தொடங்கி வைத்தார். 

இந்தியாவின் ஐந்தாம் தலைமுறைக்கான 5ஜி இணைய சேவைகள் முதற்கட்டமாக டெல்லி, சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, கொல்கத்தா போன்ற 13 நகரங்களில் இந்த சேவை இன்று முதல் அமல்படுத்தப்படுகின்றது. இவை அடுத்த இரண்டாண்டுகளில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இச்சேவையை முழுமையாக்க தீவிரமான நடைமுறைக்கு வரும்.

பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று இந்தியன் மொபைல் காங்கிரஸ் (ஐ.எம்.சி) மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் இந்தியாவில் 5ஜி சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் மூன்று பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் முன்பு 5ஜி இணையத்தின் மாதிரியை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

5ஜி சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவைகளையும் இவை தொடர்பான தொழில்நுட்பங்களையும் ஆய்வு செய்தார். சமீபத்தில், 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டது. அதல் ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா, அதானி நிறுவனம் ஆகியவை அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்தன. மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது.

பெரும்பாலான அலைவரிசையை வாங்கி ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், நாட்டில் 5ஜி சேவை இன்று தொடங்கியுள்ளது. இந்த சேவை மிக நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட சேவை இப்போது அனைவருக்கும் கிடைக்கும் தருவாயை எட்டியுள்ளது. இதன் வாயிலாக இந்தியாவின் டிஜிட்டல் துறையும் தொழில் நுட்ப துறையும் அதன் செயல்களை வேகமாக எடுத்து செல்லும்.

தொலைத்தொடர்பு துறையில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இந்தியாவும் போட்டி போட்டுக் கொண்டு அனைத்து துறைகளிலும் முன்னோக்கி செல்ல இந்த 5ஜி சேவை மிகுந்த வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here