நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைக்க ஒன்றரை மணிநேரம் அழுத டான்ஸ் மாஸ்டர்

0
16

நாட்டு நாட்டு: ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்தது குறித்து அதன் டான்ஸ் மாஸ்டர் பிரேம் ரக்ஷித் கூறியதாவது,

நாட்டு நாட்டு பாடலுக்கான உருவாக்கத்தின்போது நான் தனிமையில் தவித்தபடி இருந்தேன். இதுபோன்ற ஒரு நடனம் நடக்காது என உணர்ந்த நான் வாஷ்ரூமில் கிட்டதட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அழுதுகொண்டிருந்தேன். ஆனால் இயக்குனர் ராஜமவுலியின் கடினமான உழைப்பால் தான் இது சாத்தியமானது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டு ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரால் இது நிஜமானது. ஏனென்றால் அவர்கள் இருவரும் சிறந்த நடன கலைஞர்கள். மேலும் இசையமைப்பாளர் கீரவாணியின் இசை முழு சுமையையும் குறைத்துவிட்டது.

nattu nattu song dance master crying one and half hours for making this song

ராஜமவுலி என்னிடம் பாடலுக்கான கான்செப்ட், அது எப்படி அரங்கேறப் போகிறது என அனைத்தையும் சொல்லிவிட்டார்.  ‘நாட்டு நாட்டு’ பாடலின் ஸ்டெப்புக்காக எனக்கு 2 மாதங்கள் தேவைப்பட்டன. பின்னர் பாடலை ஒத்திகை பார்க்கவும் படமாக்கவும் சுமார் 20 நாட்கள் ஆனது. ஜூனியர் என்டிஆரும் சரி, ராம் சரணும் சரி மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். காலை 6 மணிக்கு எழுந்து இரவு 10 மணிக்குதான் தூங்க செல்வோம். வழக்கமாக 3,4 ஸ்டெப்களைத்தான் நடனத்தில் அமைப்போம். இப்பாடலுக்காக 118 ஸ்டெப்களை ரிஹர்சல் பார்த்தது கஷ்டமாக இருந்தது. இப்போது ஆஸ்கர் வாங்கிய பிறகு பட்ட கஷ்டமெல்லாம் பறந்து போய்விட்டது என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here