நவராத்திரி இரண்டாம் நாளின் சிறப்பு: பார்வதி தேவியின் பரிபூரண ஆற்றலை பெற இந்த நவராத்திரி பூஜைகள் கொண்டாடப்படுகிறது. இந்த நவராத்திரி பூஜைகள் 9 நாட்கள் வெகு சிறப்பான முறையில் அனைவரது வீடுகளிலும் கோவில்களிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அம்பாளின் அருளை பெற காலை மாலை என இருவேலையும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஓன்பது நாட்களும் சிறப்பான முறையில் பூஜைகள் செய்து நண்பர்கள் உறவினர்கள் வீட்டிற்கு அருகில் உள்ளவர்களை அழைத்து அவர்களுக்கு பிரசாதம் வழங்குதல் தாம்பூலம் தருதல் போன்றவைகளை கொடுத்து அவரது அன்பையும் ஆதரவையும் பெறுதல் சிறப்பு.

ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு அர்ச்சிக்க, பூஜை செய்து சாற்ற என்று தினமும் ஒரு வகை மலர், தினசரி வாசிக்க ஒரு விதவிதமான ராகம் மற்றும் வாத்தியங்கள், பூஜையில் பாராயணம் செய்ய மந்திரங்கள் என்று அன்றாடம் ஒரு திருவிழாவே வீட்டில் நடக்கும். செப்டம்பர் 26 அன்று நவராத்திரி தொடங்கி, நவராத்திரியின் 2 ஆம் நாள், செப்டம்பர் 27 ஆம் தேதி வருகிறது.
இதையும் அறிந்து கொள்ளுங்கள்: நவராத்திரி வழிபாட்டு முறைகளும் அதன் முக்கியத்துவமும்
நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள்
இன்று வழிபட வேண்டிய சக்தி தேவி: ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி, கௌமாரி அம்மன் மற்றும் பிரம்மச்சாரிணி திதி: துவதியை
நிறம்: சிவப்பு
மலர்: முல்லைப் பூ
கோலம்: கோதுமை மாவினால் கட்டம் போட்ட கோலம் இட வேண்டும்
ராகம்: கல்யாணி ராகம்
நைவேத்தியம்: காலை நேரத்தில் புளி சாதம் மற்றும் மாலை நேரத்தில் வெள்ளை பயத்தம் பருப்பு சுண்டல்
மந்திரம்: ராஜ ராஜேஸ்வரி அஷ்டகம்
பலன்கள்: ஐஸ்வர்யம் பெருகும்
நவராத்திரியின் இரண்டாம் நாளில், துர்க்கையின் பல வடிவங்களை வழிபடலாம். பார்வதி தேவியின் மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்கள் தான் கொற்றவை தேவி. அதில் மிகவும் சக்தி வாய்ந்த அவதாரம் தான் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி. முல்லைப்பூவும் மறு என்ற இலையும், ராஜ ராஜேஸ்வரி அம்மனுக்கு மிகவும் விருப்பம் என்று நம்பப்படுகிறது.
மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தாலான பொருட்களை தானம் செய்வது, சகல சௌபாக்கியங்களையும் கொடுக்கும். செவ்வாய் கிரகத்தைக் கட்டுப்படுத்தும் கிரகம் தான் பிரமச்சாரிணி தேவி, இவரை பூஜிப்பவருக்கு செவ்வாய் கிரக தோஷம் மற்றும் தாக்கம் நீங்கும் என்பது ஐதீகம்.