நவராத்திரி மூன்றாம் நாளில் வணங்க வேண்டிய தெய்வம் வழிபாட்டு முறைகள். நவராத்திரி திருவிழாவானது 26 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக அனைத்து கோவில்களிலும் வீடுகளிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
இன்று புதன்கிழமை நவராத்திரியின் மூன்றாம் நாளில் வணங்க வேண்டிய தெய்வம் மற்றும் வழிபடும் முறைகளை இப்பதிவின் மூலம் அறியலாம். உலக உயிர்களை காப்பதற்காகவும் சகல செல்வ வளங்களையும் பெறுவதற்காகவும் அம்பாளின் அருளை பெறவும் நடத்தப்படும் நவராத்திரி நாளான மூன்றாம் நாளில் வராஹி அம்மன் உருவத்தை ஆவாகணம் செய்து வழிப்பாடு நடத்துதல் சிறப்பு.
நவராத்திரியின் மூன்றாம் நாளில், வாராஹி அம்மனையும், இந்திராணி தேவியையும் வணங்கலாம். வாராகி அம்மன், அசுரனை அழித்த கோலத்தில் காட்சி தருவார். இந்த நாளில், நீல நிற மலர்கள், கருந்துளசி ஆகியவற்றை அம்பாளுக்கு அர்ச்சித்து வழிபடுபது சிறப்பு. தைரியத்துக்கு உரித்தான வாராஹி அம்மனை வழிபட்டால், மன குழப்பம், இனப் புரியாத பயம், சஞ்சலம் ஆகியவை நீங்கும். எதிரிகள் காணாமல் போவார்கள்.

இந்திராணி தேவி, சப்த கன்னியர்களில் ஒருவர். வெள்ளை யானை இவரது வாகனம். இந்திராணியை வணங்கினால், சொத்து சேரும் மற்றும் உயர் பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதையும் கவனியுங்கள்: நவராத்திரி இரண்டாம் நாளின் சிறப்பு
நவராத்திரி நாள் 3: செப்டம்பர் 28, புதன் கிழமை
வழிப்பட வேண்டிய தெய்வம்: ஸ்ரீவராஹி அம்மன், இந்திராணி
திதி: திரிதியை
நிறம்: கருநீலம்
கோலம்: ஜவ்வரியினால், மலர் கோலம் போடுவது இந்நாளின் சிறப்பு.
மலர்கள்: செண்பகம், சம்பங்கி.
நைவேதியம்: சர்க்கரைப் பொங்கல்.
பழம்: பலாப்பழம்.
பலன்: உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்படுதல்.
இந்த நாளில் வராஹி அம்மனையும், இந்திராணி அம்மனையும் வழிபட்டு உத்தியோகத்திலும் தொழிலும் மேன்மை அடைய வேண்டி கடவுளை வணங்கி வருவது சிறப்பு.
மாலையில் கொலுவை பார்க்க வரும் சுற்றத்தாருக்கு பூஜை மற்றும் தாம்பூலம் வழங்கி அம்மனின் அருளை பெற வேண்டும்.