நவராத்திரி நான்காம் நாளில் வழிபடும் தெய்வம் மற்றும் சிறப்பு

0
3

நவராத்திரி நான்காம் நாளில் வழிபடும் தெய்வம் மற்றும் சிறப்புகளை இப்பதிவின் மூலம் அறிந்து அதன்படி நடப்போம்.

இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் விழாக்களில் நவராத்திரியும் ஓன்று. அம்பிகையின் பூரண அருளை வேண்டி பெண்கள் வீட்டிலும் கோவில்களிலும் வழிபாடு நடத்துவர். அவரவர் வீடுகளிலும் கோவில்களிலும் கொலு கொலு பொம்மைகள் வைத்து சிறப்பான முறையில் பூஜைகள் செய்து கொலு பொம்மைகள் பார்க்க வரும் விருந்தினருக்கு பிரசாதம் வழங்கி தாம்பூலம் கொடுத்து மகிழ்வது பண்பாடாகவும் நாகரீக வழக்கமாகவும் இவ்விழாவில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நவராத்திரி விழாவானது இன்று 4ம் நாள் இந்த நாளில் மகாலஷ்மி வழிபாடு நடத்த வேண்டும். திருமகளாகவும் அலை மகளாகவும் பெயர் கொண்டு இந்த அகிலத்தை ஆட்சி புரிகின்றால் அன்னை மகாலஷ்மி. மகாலஷ்மி என்பவள் ஐஸ்வரியத்தை அள்ளி வழங்குபவள். சகல செலவ வளத்தையும் நலத்தையும் இவ்வழிபாட்டின் மூலம் பெற இந்த நான்காம் நாளில் மகாலஷ்மி வழிபாடு நடத்தப்படுகிறது.

நவராத்திரி நான்காம் நாளில் வழிபடும் தெய்வம் மற்றும் சிறப்பு

லக்ஷ்மி, சரஸ்வதி மற்றும் பார்வதி என்று மூன்று தேவியரும் ஒன்று சேர்ந்து மகிஷாசுரனை வதம் செய்ததற்காக, நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி புரட்டாசி அமாவசைக்கு அடுத்த நாள் தொடங்கி, ஒன்பது நாட்கள் நடைபெறுகிறது.

நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து, பூஜைகள், என்று விமரிசையாகக் கொண்டாடப்படும். ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு அலங்காரம், ஆராதனை, மற்றும் ஒவ்வொரு அவதராமாக வழிபடும் வழக்கம் உள்ளது. 2022 ஆம் ஆண்டு, நவராத்திரி செப்டமபர் 26 ஆம் நாள் தொடங்கி கொண்டாடப்பட்டு வருகின்றது.

நவராத்திரி நாள் 4: செப்டம்பர் 29, புதன் கிழமை

வழிபட வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி என்கின்ற சக்தி அன்னை

திதி: சதுர்த்தி

நிறம்: மஞ்சள்

மலர்: ஜாதி மல்லிகை

கோலம்: படிக்கட்டு வேண்டும்

ராகம்: பைரவி ராகம்

நைவேத்தியம்: காலை நேரத்தில் கதம்ப சாதம் மற்றும் மாலை நேரத்தில் பட்டாணி சுண்டல்

மந்திரம்: மகாலட்சுமி அஷ்டோத்திரம் வரலஷ்மி விரதமும் 108 மகாலஷ்மி மந்திரமும்

பலன்கள்: சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

இது நவராத்திரி அன்று 9 நாட்களும் பூஜித்து கொலு பார்க்க வரும் சுற்றாத்தாருக்கு பிரசாதங்கள் பகிர்ந்து தாம்பூலம் கொடுத்து அன்பு, கருணை, பண்பு, செல்வம் என அனைத்துவித சகல சௌபாக்கியங்களையும் பெற மகாலஷ்மி அன்னையை வணங்கி வழிபடுவோமாக.

இது போன்ற ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிடம், செய்திகள், சினிமா, நகைச்சுவை, தமிழ் இலக்கியம், பழமொழிகள், உடல் நலம், தொழில் நுட்பம் என அனைத்து வித தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here