நவராத்திரி வழிபாட்டு முறைகளும் அதன் முக்கியத்துவமும்: உலக உயிர்களை காப்பதற்காவும் வழிப்படும் தன் பக்தர்களை காப்பதற்காகவும் பாராசக்தியான அம்பிகையானவள் மகிஷாசுரன் என்ற அரக்கனை அழித்த நாளை போற்றும் விதமாக வழிபடும் நாளாகுவும் பாரம்பரியமாக நடைபெறும் விழாவாக இருந்து வருகிறது. இந்த நவராத்திரி விழா உலகம் மழுவதிலும் உள்ள இந்திய மக்களின் இல்லங்கள் மற்றும் கோவில்கள் தோறும் வெகு விமர்சையாக இந்நவராத்திரி விழா கொண்டாடப்படுகின்றது.
நவ என்றால் 9 என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. ஓன்பது ராத்திரிகள் பார்வதி தேவியை விரதம் இருந்து காலை மாலை என இரு வேலையும் ஆராதனை செய்து கொலு பொம்மைகள் அமைத்து விரதமிருந்து அக்கம் பக்கத்து வீட்டாரினை அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுதல் மற்றும் ஓற்றுமையாக பூஜித்து வருவது நவராத்திரி விழாவாகும். இப்படியாக 9 நாட்கள் விழா சிறப்பாக நடைபெற்று 10ம் நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடி இந்நவராத்திரி விழாவினை முடித்து வைப்பர்.

2022 ம் ஆண்டுக்கான நாராத்திரி எப்போது:
இந்த 2022 க்கான நவராத்தி விழாவானது செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 4ம் தேதி வரை வெகு விமர்சையாக அனைத்து இந்து மதத்தினராலும் கொண்டாடப்பட உள்ளது. 4ம் தேதி சரஸ்வதி பூஜையுடன் இந்த நவராத்திரி விழா முடிவுறுகிறது.
நவராத்திரியானது புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகிறது . புரட்டாசி மாதம் அமாவாசையன்று நவராத்திரி தொடங்கி, பத்தாம் நாள் தசமி திதியன்று நவராத்திரி முடியும். இந்த திதிகளின் அடிப்படையில் தான் இந்தியா முழுவதுமே நவராத்திரி கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.
நவராத்திரி தோன்ற காரணம்:
மகிஷாசுரன் என்ற அரக்கன் நெடுநாள் கடும் தவம் இருந்து பிரம்ம தேவனை பூஜைத்து வந்தான். அவனது கடும் தவத்தை அறிந்த பிரம்ம தேவன் அவர் முன் தோன்றி உம் கடும் தவத்தை நான் மெச்சினேன் எனக் கூறி உனக்கு என்ன வரம் வேண்டும் என வினவினார். அக்கனமே மகிஷாசுரன் சற்றும் எதிர்பார்க்காமல் எனக்கு இற்பென்பதே வரக்கூடாது அப்படி இல்லையென்றால் ஓரு பெண்ணால் தான் எனக்கு வர வேண்டும் எனவும் வரம் வேண்டினான்.
மகிஷாசுரன் ஏற்கனவே மிகவும் பலம் வாய்ந்த அரக்கர் குல மைந்தன் அவன் திட்டம் தீட்டியே இந்த வரத்தை பெற்றான். ஏனெனில் எந்த பெண்ணும் என்னை கொல்ல முடியாது ஓரு பெண் என்னை கொல்ல முடியுமோ அப்படி எந்த ஓரு பெண்ணும் என்னை அழிக்க பிறக்கப்போவதும் இல்லை என்ற அகந்தையில் இப்பேர்பட்ட வரத்தை பிரம்மனிடம் வேண்டிப் பெற்றான்.
மகிஷாசுரன் பெற்ற வரத்தை தவறாக பயன்படுத்தி விண்ணுலகிற்கும் மண்ணுலகிற்கும் தேவலோகத்தில் வாழும் முனிவர் பெரு மக்களுக்கும் பல இன்னல்களை அளித்து வந்தான். தினம் தினம் அவனது பலத்தால் பல உயிர்களை வாட்டி வந்தான். தேவலோகத்தில் வாழும் ரிஷி மற்றம் தேவர்களையும் பல இன்னலுக்கு ஆளாக்கினான். அவர்கள் அனைவரும் செய்வது அறியாது முப்பெரும் தேவியரை சென்று வணங்கினர்.
இதையும் அறிந்து கொள்ளுங்கள்: நவராத்திரியில் கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள்
அந்த முப்பெரும் தேவியரும் ஓன்றாக உருவமெடுத்து மாபெரும் மகிஷாசுர காளியாக அவதாரம் எடுத்து அந்த மகிஷாசுர அரக்கனை அழிக்க 9 நாட்களாக போர் செய்தனர். இறுதியில் அந்த அரக்கனை வதம் செய்தால் அன்னை பராசக்தி அந்த நாளை போற்றும் விதமாக கொண்டாடப்படுவது தான் நவராத்திரி விழா.
முப்பெரும் சக்திகளின் வழிபாடு:
இந்துக்களின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் பிரம்மா, விஸ்னு, சிவன் எனப்படும் தெய்வங்களினுடைய சக்திகளான சரஸ்வதி, மஹாலக்ஷ்மி, துர்க்கை எனப்படும் சக்திகளுக்காக இந்த விரதம் நோற்கப்படுகிறது.
முதல் மூன்று தினங்களும் வீரத்தை வேண்டி துர்க்கையினையும் அடுத்த மூன்று தினங்களும் செல்வத்தை வேண்டி மஹாலக்ஷ்மியினையும் இறுதி மூன்று தினங்களும் கல்வியை வேண்டி சரஸ்வதியும் வழிபடுகிறார்கள்.
இவ்வாறு விரதம் பூஜித்து மூன்று சக்திகளையும் வழிபடுவதனால் வீரம், கல்வி, செல்வம் என்பன வாழ்வில் கிடைக்கும் என்பது இந்துக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
நவராத்திரி விழாவின் சிறப்பு:
நவராத்திரி கொண்டாடப்படும் 9 நாட்களும் கோவில்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் கொலு பொம்மைகள் வைத்து கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கொலு பொம்மைகள் வைப்பதற்கு முக்கிய காரணமாக அன்னை பராசக்திக்கும் மகிஷாசுர அரக்கனுக்கும் நடந்த போரினை குறிக்கும் வகையிலும் கல்வி வளம், செல்வம், வீரம் வளம் இந்த மூன்று வளத்தையும் பெற இந்த நவராத்திரி விழாவில் கொலு வைத்து வழிப்படுவதாக கூறப்படுகிறது.
கொலுப் படிகள் 5 அல்லது 7 அல்லது 9 அல்லது 11 படிகள் என கொலு பொம்மைகளை வைத்து வழிபடுவர். அக்கம் பக்கத்து வீட்டாரை அழைத்து கொலுப் பார்க்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என் வீட்டிற்கு வாருங்கள் என இன்முகத்துடன் அழைத்து அப்படி வருபவர்களுக்கு தீப ஆராதனை செய்து நொய்வேதியமாக படைக்கப்பட்ட இனிப்பு, சுண்டல், பலகாரங்கள் என அனைத்தையும் கொடுத்து அவர்களுக்கு தாம்பூலமான வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், குங்குமம் இட்டு வழியனுப்பி விட வேண்டும். இப்படியாக 9 நாட்களும் பூஜித்து வருவது நன்மை பயக்கும்.
இப்படியாக நவராத்திரி விழாவினை கொண்டாடினால் உலக உயிர்கள் நலமுடன் வாழும் நாமும் நம் சுற்றாத்தாருக்கும் அன்னை பராசக்தி அனைத்து வித ஆற்றலையும் தருவாள் என்பது ஐதீகம்.
இது போன்ற ஆன்மீக செய்திகள் மற்றும் ஜோதிடம், கல்வி, தமிழ் இலக்கியம், உடல்நலம், செய்திகள், சினிமா என அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.