நயன்தாரா, ஜெயம் ரவி நடிக்கும் ‘இறைவன்’ பட ஷீட்டிங் நிறைவடைந்தது

0
26

இறைவன்: மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘தனி ஒருவன்’. இதையடுத்து மீண்டும் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் ‘இறைவன்’. இப்படத்தை அஹமது இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷீட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடிந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து நயன்தாரா நடித்துள்ள ‘கோல்ட்’ என்ற மலையாளப்படம் விரைவில் ரிலீசாகிறது. அடுத்து தமிழில் அவர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படத்தின் ஷீட்டிங் நிறைவடைந்துள்ளது. மேலும் நயன்தாரா இந்தியில் அறிமுகமாகும் ‘ஜவான்’ திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இதில் இரட்டை வேடத்தில் ஷாருக்கான் நடிக்க, ஒரு ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

nayan thara and jayam ravi again acting with iraivan movie

ஜெய் நடித்த ‘வாமனன்’, ஜீவா நடித்த ‘என்றென்றும் புன்னகை’, உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் ஏற்கனேவே ஜெயம் ரவி மற்றும் டாப்ஸி நடித்த ‘ஜனகணமன’ என்ற படத்தை இயக்கி வந்தார். சில காரணங்களால் அப்படத்தின் ஷீட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அஹமத் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here