நயன்தாரா பரிந்துரையால் ஆயுர்வேத சிகிச்சைக்கு மாறிய சமந்தா

0
10

நயன்தாரா-சமந்தா: நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் எனும் தசை அழற்ஜி நோய் ஏற்பட்டுள்ளது. இந்நோய் பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து நடப்பதற்கே சிரமம் ஏற்படும். அடிக்கடி மயக்கம் ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகளால் மிகவும் பாதிக்கப்பட்டருப்பதாக நடிகை சமந்தாவே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். கையில் குளுக்கோஸ் போட்டிருப்பது போன்ற ஒரு போட்டோவையும் அவர் பதிவிட்டிருந்தார். இந்நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் அமெரிக்கா சென்று வந்தார். அவரது உடல்நிலை சற்றே தேறியிருந்த நிலையில் மீண்டும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. அரிய வகை நோயால் தான் பாதிக்கப்பட்டிருப்பதாக சமந்தா சமூக வலைதளங்களின் வாயிலாக தகவல் தெரிவித்தார். அவர் பூரண குணமடைய நடிகர், நடிகைகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

nayanthara advice to samatha

இந்நிலையில் நடிகை நயன்தாராவும் சமந்தாவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் இணைந்து நடித்தனர். இதில் இருவரும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இந்நிலையில் நட்பு அடிப்படையில் கேராளாவுக்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளும்படி சமந்தாவுக்கு அறிவுரை வழங்கினார் நயன்தாரா. இதையடுத்து அவரது அட்வைஸை ஏற்றுக்கொண்டு சமந்தாவும் கேரளா சென்றுள்ளார். அங்கு அவர் ஆயுர்வேத சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அவர் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here