நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முதல் சீசனாக விரைவில்

0
8

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் விரைவில் நெட்ஃபிளிக்ஸில் முதல் சீசனாக வெளியாகிறது.

தமிழ்நாட்டின் லேடி சூப்பர் ஸ்டாரன நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் திருமணம் ஜூன் 9 ம் தேதி மாமல்லபுரம் நட்ச்சத்திர விடுதி ஓன்றில் வெகு விமர்சையாக நடைப் பெற்றது. இத்திருமண விழாவினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி கொடுத்து அனைத்து வித செலவினையும் ஏற்று நடத்தியது. விருந்தினர்களுக்கு மிகுந்த கட்டுபாடுகளுடன் நடைபெற்ற திருமண நிகழ்வுகளை கெளதம் வாசுதேவ மேனன் இயக்குவதற்கு ஓப்பந்தம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், திருமண நிகழ்வு மிகப்பெரிய தொகைக்கு netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது. அதற்காக பல உடன்படிக்கைகள் இருதரப்பிலும் ஏற்படுத்தப்பட்டன. அந்த வகையில் புகைப்படங்கள் குறிப்பிட்ட தேதியில்,  குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வெளியிட வேண்டும் என கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறப்பட்டது.

நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் முதல் சீசனாக விரைவில்

அதன்படி வெகு சில புகைப்படங்கள் மட்டுமே இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார்.  இந்த நிலையில் Netflix தளத்தின் ஒப்பந்தத்தை விக்னேஷ் சிவன் மீறிவிட்டார் என தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் காரணமாக ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர் எனவும் செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதை விக்னேஷ் சிவன் தரப்பினர் மறுத்துள்ளனர். அத்துடன் நயன்தாரா –  விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு முதல் சீசனாக விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அதில் திருமணம் மற்றும் திருமணம் சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொருத்து அடுத்த சீசன்கள் வெளியாக வாய்ப்புள்ளது. அதில் நயன்தாராவின் வாழ்க்கை பயணம் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.  அதற்கான படப்பிடிப்பை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படப்பிடிப்பு நடத்தி வருகிறார். அத்துடன் ஒப்பந்தம் ரத்து என வெளியாகும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here